Rummyய தடை பண்ணீடீங்க சரி, இதெல்லாம் ஏன் தடை செய்யல – சரத்குமார் ஆவேசம்

0
752
sarathkumar
- Advertisement -

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்தது குறித்து சரத்குமார் ஆவேச கருத்தினை தெரிவித்து இருக்கிறார். சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி சூதாட்டம் விளையாட்டு பலருடைய வாழ்க்கையை சூறையாடிக் கொண்டு வருகின்றது. இந்த விளையாட்டின் மூலம் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்திருக்கின்றனர். இதனால் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது.ஆனால், இந்த விளம்பரங்களில் பிரபல நடிகர்கள் தான் நடித்து மக்கள் மத்தியில் வைரல் ஆக்கி வருகிறார்கள். இது குறித்து சோசியல் மீடியாவிலும் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

-விளம்பரம்-

ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் தமிழகத்தில் அதிக அளவில் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு இந்த வகை விளையாட்டுகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.இச்சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்ததால் அக்டோபர் மூன்றாம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் அவசர சட்டத்திற்கு மாற்றாக நிரந்தர சட்ட மசோதா சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இதற்கான மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார். அதன்படி, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் சரத்குமார் நடித்து இருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதுகுறித்து கடந்த சில வாரங்களுக்கு முன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சரத்குமார் ‘சரத்குமாரால் தான் இந்த நிறைய பேர் கெட்டுப் போகிறார்கள் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் கருத்துக்கள் வந்திருந்தது.எல்லோரும் லட்சக்கணக்கில் கிரெடிட் கார்டை வைத்துக் கொண்டுதான் விளையாடுகிறீர்களா? இல்லை எல்லோரும் நான் விளம்பரத்தில் நடித்ததினால் தான் வீடு வாசலை இழக்கிறீர்களா? நான் சொல்றதுக்காக தான் விளையாடுகிறீர்கள் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

-விளம்பரம்-

கெட்டுப் போகிறவன் என்று நினைத்தால் அவன் எப்படி இருந்தாலும் கெட்டுதான் போவான். விடுமுறை நாட்களில் மரத்தடியில் ஆங்காங்கே சீட்டுக்கட்டுகளை வைத்துக்கொண்டு விளையாடிகிறார்கள். அங்கேயும் சூதாட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது எல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?’தடை செய்ய வேண்டும் என்றால் ஒரு கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும். அந்த சட்டத்தை அமல்படுத்தி அதற்கு பிறகும் நான் தான் காரணம் என்று சொன்னால் ஏற்று கொள்கிறேன்.

நீங்கள் என்னை ban பண்ண சொல்லலாம். நீங்களாக கெட்டுப் போவதற்கெல்லாம் நான் பொறுப்பல்ல என்று ரம்மி சர்க்கிள் விளம்பரத்தில் நடித்தது குறித்து சரத்குமார் பேசி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ஆன்லைன் விளையாட்டு தடை செய்தது பற்றி சமீபத்தில் பேசி இருக்கும் சரத்குமார்’ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டு இருப்பது சந்தோஷமாக இருக்கிறது ஆனால் ஆன்லைனில் நடக்கும் அனைத்து சூதாட்டங்களையும் தடுக்க இந்தியாவே முடிவெடுக்க வேண்டும் ட்ரீம் லெவன் உட்பட அனைத்தும் சூதாட்டம் தான் ஆன்லைனில் விளையாட வேண்டும் என்றால் இந்தியாவில் மட்டும் தான் விளையாட முடியுமா உலகம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் விளையாடலாம். ஆபாச படங்களை ஏன் தடுக்க முடியவில்லை. தடை செய்தால் அணைத்து விஷயத்தையும் தடுக்க வேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.

Advertisement