பாஜக கட்சியில் சரத்குமார் இணைந்தது குறித்து சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகி இளஞ்செழியன் ஆவேசமாக அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் குறித்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

அதோடு திமுக கட்சியுடன் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் இணைந்து இருக்கிறார். இது குறித்து கடந்த வாரம் கமலஹாசன் அவர்கள் பேட்டியும் அளித்திருந்தார். இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் சரத்குமார் இணைந்து இருக்கிறார். இது தொடர்பாக சென்னை தி நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று சென்றிருக்கிறார்.

Advertisement

பாஜக- சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி:

அங்கு சரத்குமார் உடன் சேர்ந்து அண்ணாமலை ஆலோசனையும் நடத்தி இருக்கிறார். அதற்கு பிறகு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தன்னுடைய கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் அவர்
சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்து கொண்டிருப்பதாக அறிவித்தார். பாஜகவுடன் சமத்துவக் கட்சி இணைந்தது முடிவு கிடையாது. மக்கள் பணிக்காக தொடக்கம். நாட்டின் வளர்ச்சிக்காகவும், இளைஞர்களின் வளர்ச்சிக்காகவும் தான் இந்த முடிவு.

Advertisement

சரத்குமார் பேட்டி:

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்க சமத்துவ கட்சி தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்று கூட்டத்தில் கூறியிருக்கிறார். இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து சரத்குமாருக்கு பேட்டியும் அளித்திருக்கிறார். அதில் அவர், இரவு இரண்டு மணி இருக்கும். அந்த நேரத்தில் நான் என்னுடைய மனைவியை எழுப்பி எனக்கு பாஜகவுடன் இணைய தோன்றுகின்றது என்று கூறினேன். உடனே என்னுடைய மனைவி ராதிகா, நீங்கள் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் நான் உங்களோடு உறுதுணையாக இருப்பேன் என்று சொன்னார்.
இதனால் பாஜகவுடன் சமத்துவ கட்சியை இணைத்து விட்டோம் என்று கூறியிருக்கிறார்.

மாவட்ட நிர்வாகி பேட்டி:

இந்த நிலையில் சரத்குமாரின் முடிவை கண்டித்து சமக மாவட்ட நிர்வாகி இளஞ்செழியன் கொடுத்து இருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, சரத்குமார் பாஜகவுடன் இணைந்தது குறித்து இளஞ்செழியன், சரத்குமார் கட்சி நடத்த லாக்கில்லை என்று கட்சி அலுவலகத்திற்கு முன்பு போராட்டம் செய்து கிண்டலாக பேசியிருக்கிறார். அதர் பின் செய்தியாளர்களை சந்தித்து அவர், சரத்குமார் எடுத்த இந்த முடிவை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

சரத்குமார் குறித்து சொன்னது:

அவர் தொண்டர்களிடம் எந்த ஒரு ஆலோசனையும் நடத்தவில்லை. எங்களுக்கு பாஜக வேண்டாம். எனக்கு பாஜக பிடிக்காது. பாஜகவுடன் நான் சேர மாட்டேன். என்றும் எங்கள் தலைவர் தான். அவரை நம்பி தான் கட்சிக்கு வந்தோம். பாஜகவை எங்களால் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது. அவங்க கிட்ட வேலை செய்வதற்கு வேட்டியை மடித்து வைத்து கொள்ளலாம். சரத்குமார் அவர் மனைவியை கேட்டு பாஜகவில் இணைந்தார் என்றால் நான் என் மனைவியின் பேச்சைக் கேட்டு இருந்தால் கட்சியிலே சேர்ந்திருக்க மாட்டேன் என்றெல்லாம் ஆவேசமாக பேசி இருக்கிறார்.

Advertisement