200க்கும் மேற்பட்ட படக்குழுவினருக்கு அண்ணாச்சி கொடுத்த பொங்கல் பரிசு.

0
10927
Annachi
- Advertisement -

பொதுவாக நடிகர், நடிகைகள் விளம்பரங்களில் நடித்துள்ளதை நாம் பார்த்துள்ளோம். ஆனால், சொந்தக் கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக்கொண்டவர் தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் அருள். தனது கடைக்கான விளம்பரத்தில் கலர் கலரான ஆடைகளை அணிந்து கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பலருடன் இணைந்து விளம்பரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்து உள்ளார். ஜவுளி முதல் வீட்டு உபயோக சாதனம் வரை என பல கடைகளை வைத்திருக்கிறார் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி. தமிழகத்தில் புகழ் பெற்ற கடைகளில் ஒன்று தான் சரவணா ஸ்டோர்ஸ். அதுமட்டும் இல்லாமல் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பல கிளைகள் உள்ளன. இதனால் நெட்டிசன்கள் பலரும் அவரை காலாய்த்து தள்ளினாலும் அவர் அசராமல் விளம்பரத்தில் நடித்து தன் கடையை பிரோமோட் செய்து வருகிறார். தற்போது இவர் சினிமா திரையுலகிலும் கால் பதிக்க போகிறார்.

-விளம்பரம்-

தமிழ் சினிமா துறை நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் சரவணன் அருள். அப்போது அவரிடம் எதார்தமாக நீங்கள் சினிமாவில் நடிப்பீர்களா? என்று கேட்க அதனை சீரியஸாக எடுத்துக் கொண்டு சினிமாவில் நடித்தால் ஹீரோ தான் என்று களமிறப்பிகியுள்ளார் அருள். சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் அருள் தயாரித்து, நடிக்கும் பிரம்மாண்டமான படத்தை இயக்குனர்கள் ஜெர்ரி மற்றும் ஜேடி இயக்குகிறார்கள். இந்த படத்தின் பட்ஜெட் மட்டும் 30 கோடி என்று கூறப்படுகிறது. முதல் படமே இத்தனை கோடி பட்ஜெடடா? என்று கோலிவுட் வட்டாரத்தில் அனைவரும் வாயை பிளந்து வருகின்றனர். மேலும், இது வதந்தி என்று பலரும் கூறி நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பூஜையை துவங்கி அனைவரின் வாயையும் அடைத்தார் நம்ம அருள் அண்ணாச்சி. இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக மிஸ் இந்தியா பட்டம் பெற்ற “கீத்திகா திவாரி” என்பவர் நடித்து உள்ளார்.

இதையும் பாருங்க : சித்தி 2 வில் சிவகுமாருக்கு பதிலாக சித்தப்பா வேடத்தில் நடிப்பது இவர் தானா ?

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தின் பட பிடிப்புகள் துவங்கி உள்ளது. அதில் சங்கர் படத்திற்கு டப் கொடுக்கும் வகையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் காட்சியே அண்ணாச்சிக்கு கதாநாயகியுடன் ரொமான்டிக் பாடல் காட்சி தானாம். இந்நிலையில் தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் அருள் அவர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் பரிசு வழங்கி மகிழ்ந்து உள்ளார். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பாக பாடல் காட்சி எடுக்கப்படுகிறது. இந்த பாடல் காட்சி பிரம்மாண்டமான செட்டில் படமாக்கப்பட்டது.

இந்த பாடலுக்கு நடன இயக்குனர் பிருந்தா அமைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நடனக்கலைஞர்கள் இணைந்து நடனம் ஆடுகிறார்கள். இந்த பாடல் காட்சியில் லெஜெண்ட் சரவணன் அருள் அவர்கள் மிகவும் நளினமாக, அருமையாக நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தார் அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் சண்டை காட்சியும் படமாக்கப்பட்டது. ஏவிஎம் ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான லேபார்ட்டி செட்டில் சண்டைக்காட்சி போடப்பட்டது. இந்த சண்டைக்காட்சியை அனல் அரசுவின் இயக்கத்தில் எடுக்கப்படுகிறது.

-விளம்பரம்-

நடனத்தைத் தொடர்ந்து, சண்டை காட்சியிலும் சரவணன் அருள் அபாரமாக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். இவருடைய நடனம், சண்டைக் காட்சியை பார்த்த படக்குழுவினர் அனைவரும் வியந்து பாராட்டி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக சரவணன் அருள் அவர்கள் 200க்கும் மேற்பட்ட படக்குழுவினர் அனைவருக்கும் பாரம்பரிய முறையில் பொங்கல் பயிற்சிகளை வழங்கி உற்சாகப் படுத்தி உள்ளார்.

Advertisement