தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சரவணன். இவர் 1991ம் ஆண்டு வெளியான வைதேகி வந்தாச்சு என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக தமிழ் சினிமா உலகத்திற்கு அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். அதன் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இருந்தாலுமே இவரால் கடைசி வரை ஹீரோவாக நடிக்க முடியவில்லை.

அதற்குப்பின் வாய்ப்புகள் குறைந்த உடன் குணசித்திர வேடங்களில் சரவணன் நடித்து வந்தார். பின் இடையில் இவர் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார். பின் இயக்குனர் அமீரின் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன் படத்தின் மூலம் சித்தப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது.
சரவணன் குறித்த தகவல்:
இதிலிருந்து இவரை சித்தப்பு சரவணன் என்று தான் எல்லோருமே அழைக்கிறார்கள். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் குணசித்திர வேடங்களில் மிரட்டிக்கொண்டு வருகிறார். அதற்குப் பின் சரவணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் பேசிய சில சர்ச்சை கருத்தால் திடீரென்று வெளியேற்றப்பட்டிருந்தார். அதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் கதாநாயகியின் தந்தையாக சரவணன் நடித்திருந்தார்.
View this post on Instagram
சரவணன் குடும்பம்:
தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே நடிகர் சரவணன் அவர்கள் சூர்யா ஸ்ரீ என்பவரை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என்பதால் 2015 ஆம் ஆண்டு சரவணன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதில் அவருடைய முதல் மனைவிக்கு விருப்பமில்லை. இரண்டாவது மனைவிக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறார். அதற்குப்பின் சரவணனுக்கும் அவருடைய முதல் மனைவிக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை, சண்டைகள் வருவது வழக்கமாக இருந்தது.

முதல் மனைவி புகார்:
இப்படி இருக்கும் நிலையில் சரவணனின் மீதும் அவருடைய இரண்டாவது மனைவியின் மீதும் சரவணன் முதல் மனைவியான சூர்யா ஸ்ரீ போலீசில் புகார் அளித்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இது தொடர்பாக அளித்த பேட்டியில் சூர்யா ஸ்ரீ, சரவணன் என்னை துரத்தி துரத்தி காதலித்து கல்யாணம் செய்தார். அவருக்கு வாழ்க்கையில் ஒன்றுமே இல்லாத காலத்தில் அவருக்கு நான்தான் துணையாக இருந்தேன்.
https://www.youtube.com/watch?v=yzOpz-FMT5E
புகாரில் சொன்னது:
அவருடைய வெற்றிக்கு பின்னால் நானும் இருக்கிறேன். ஆனால், அவர் என்னை புரிந்து கொள்ளவில்லை. இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். சரவணன், அவருடைய இரண்டாவது மனைவியும் சேர்ந்து என்னை தொடர்ந்து மனரீதியாகும் உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தி வருகிறார்கள். சரவணன் உடைய இரண்டாவது மனைவி தேவி எனக்கு கொலை மிரட்டல் விடுகிறார். இது என்னுடைய உயிருக்கு பிரச்சனையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.






