நடிகை மைனாவிற்கு இரண்டாம் திருமணம் முடிந்தது. திருமண புகைப்படங்கள் இதோ.

0
145887
maina
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் மைனா கேரக்டரில் நடித்து சின்னத்திரையில் புகழ்பெற்றவர் நடிகை நந்தினி. சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும், பல்வேறு படங்களில் நடித்துள்ள மைனா சமீபத்தில் சிவகார்த்தியேகன் நடிப்பில் வெளியாகி இருந்த நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் நடித்திருந்தார்.

-விளம்பரம்-
 டிவி சீரியல்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை மைனா நந்தினிக்கும், நடிகர் யோகேஸ்வரனுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு நடிகை மைனாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது. சீரியல் நடிகரும் நடன இயக்குனராகவும் இருந்து வரும் யோகேஷ்வரன் என்பவரை மைனா காதலித்து வந்ததாக கடந்த சில காலமாக தகவல்கள் வெளியானது. மேலும், சமீபத்தில் இதனை மைனா கூட உறுதி செய்திருந்தார். நடிகர் யோகேஷ் வேறு யாரும் இல்லை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா, நாயகி போன்ற சீரியல்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : அதிகமான டிக் டாக் மோகம். பம்பு செட்டில் குளித்த விடியோவை பகிர்ந்த நெஞ்சம் மறப்பதில்லை புகழ் சரண்யா.

- Advertisement -

நடிகை மைனா கடந்த சில நாட்களாக இவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வந்தார். ஆனால், இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பது இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் தான் பலருக்கும் தெரிந்தது. இந்த நிலையில் நந்தினி மற்றும் யோகேஸ்வரனின் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர் .

 நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து தற்போது மைனா நந்தினி - யோகேஸ்வரன் திருமணம் நடைபெற்றுள்ளது.
 Photos : Social Media
 திருமணத்தில் இருவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

நடிகை மைனா ஏற்கனவே திருமணமாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை மைனாவிற்கு ஜிம் மாஸ்டர் கார்த்திக் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே குடும்ப வாழக்கை செட் ஆகாத நந்தினிக்கும் அவரது புகுந்த வீட்டில் அடிக்கடி பிரச்சனைகள் இருந்துள்ளது. மேலும், நந்தினி மற்றும் அவரது கணவர் கார்த்திக்கிற்கும் கருத்து வேறுபாடுகள் பல இருந்தது. இதன் உச்ச கட்டமாக சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவர் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார். மைனாவின் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேசும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்து

-விளம்பரம்-
Advertisement