எம்,ஜி.ஆர் குடும்பத்துல கட்டி கொடுத்து என்ன பயன், ஏலத்துக்கு வந்த வீடு, வீதிக்கு வந்த சரவணன் மீனாட்சி நடிகரின் மனைவி.

0
1242
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் நடித்த முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ராஜசேகர். ராஜசேகர் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர்,ஒளிப்பதிவாளர் ஆகவும் பணியாற்றியுள்ளார். பின் இவர் சின்னத்திரையில் நடிகராகவும் நடித்துள்ளார். 1960 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் நிழல்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது பாரதிராஜாதான். அதன் பின்னர் தமிழில் சினிமாவுக்கு படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார்.

-விளம்பரம்-
சீரியலில் ராஜசேகர்

மேலும், இவர் தமிழில் உறவுகள் சங்கமம், செல்லமடி நீ எனக்கு போன்ற பல்வேறு தொடர்களில் நடித்துள்ளார் நடிகர் ராஜசேகர். இறுதியாக ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சத்யா தொடரில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ராஜசேகர். அதே போல விஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்களில் ராஜசேகர் நடித்துள்ளார். இதனிடையே இவர் தாரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

நடிகர் ராஜசேகர் இறப்பு:

ராஜசேகர் – தாரா தம்பதிகளுக்கு பிள்ளைகள் இல்லை. மேலும், நடிகர் ராஜசேகருக்கு உடல்நிலை குறைபாடு இருந்த காரணத்தினால் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி ராஜசேகர் அவர்கள் 2019 செப்டம்பர் எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலமானார். ராஜசேகரின் இந்த மறைவிற்கு தமிழ் சினிமா பிரபலங்களும், சின்னத் திரை பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.

வீட்டு கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் தாரா:

மேலும், இவர் இறப்பதற்கு முன்பு சென்னை வடபழனியில் ஒரு வீட்டை வாங்கி இருந்தார். பாதி பணத்தை பில்டருக்கு கட்டிவிட்டார். மீதி பணத்தை எஸ்பிஐ வங்கியில் லோன் வாங்கி இருந்தார். கணவர் இறப்புக்கு பிறகு தாராவால் மீதி கடனை அடைக்க முடியவில்லை. சொந்த பந்தங்களும் அவருக்கு ஆதரவு தரவில்லை. அதுமட்டுமில்லாமல் ராஜசேகர் தன்னுடைய தங்கையை எம்ஜிஆர் குடும்பத்தில் தான் கட்டிக் கொடுத்து இருந்தார். இருந்தாலும் ராஜசேகரின் சொந்த பந்தமும், தாராவின் சொந்த பந்தமும் அவருக்கு உதவ முன்வரவில்லை. ஆதரவில்லாத நிலையில் தாரா நிற்கிறார்.

-விளம்பரம்-

உதவி கேட்டு அலையும் தாரா:

மேலும், ராஜசேகர் ஆசை ஆசையாய் வாங்கிய அந்த வீட்டை வாடகைக்கு விட்டு அந்த வாடகையை வைத்து தான் தாரா வாழ்க்கையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் மீதி கடனை கட்ட சொல்லி வங்கி தாராவுக்கு நெருக்கடி தருகிறது. இதனால் தாரா உதவி கேட்டு இயக்குனர் சங்கம், சின்னதிரை நடிகர் சங்கம், சினிமா டிவி என பல இடங்களுக்கு ஏறி இறங்கினார். ஆனால், எந்த பலனும் இல்லை. கடைசியில் தாரா முதல்வரையும் சந்திக்க முயற்சி செய்தார். அதுவும் நடக்கவில்லை.

ராஜசேகர் மனைவி தாராவின் நிலை:

இப்போது தாரா வீட்டை ஏலம் விட முடிவு செய்து நோட்டீஸ் ஓட்டிட்டு இருக்கிறது வங்கி. அந்த வீடு இல்லை என்றால் அடுத்த மாதத்திலிருந்து சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ரோட்டில் தான் இருக்கணும் என்று கண்கலங்கி இருக்கிறார் தாரா. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த விஷயம் முதல்வருக்கோ அல்லது அரசின் கவனத்துக்கோ இல்லை பெரிய நடிகர்களின் கவனத்துக்கோ சென்றால் தாராவுக்கு நல்லது நடக்கும் என்று நம்பப்படுகிறது.

Advertisement