‘சரவணன் மீனாட்சி’ என்ற தொடரின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகர் செந்தில். இவர் முதன் முதலாக ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜே வாக தான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர்களில் புகழ் பெற்ற சீரியலாக இருந்தது “சரவணன் மீனாட்சி”. இந்த சரவணன் மீனாட்சி தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகர் செந்தில். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஸ்ரீஜா.
சின்னத்திரையில் சூப்பர் ஜோடியாக கலக்கிய இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் கணவன், மனைவியாக ஒன்று சேர்ந்தனர். சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு செந்திலுக்கு சினிமாவில் நடிக்க பட வாய்ப்புகள் வந்தது. இவர் தவமாய் தவமிருந்து, செங்காத்து பூமியிலே, கண்பேசும் வார்த்தைகள், வெண்ணிலா வீடு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இதையும் பாருங்க : அஜித்தை தாக்கி வசனம் பேச மறுத்துள்ள விஜய் – இது தான் அந்த வசனமாம். இயக்குனர் பேட்டி.
ஆனால், சினிமாவில் இவருக்கு பெரிய அளவு மக்கள் மத்தியில் ரீச் கிடைக்காததால் மீண்டும் சின்னத் திரை நோக்கிய பயணம் செய்ய தொடங்கினார். பின்னர் மீண்டும் இவர் தன் மனைவியுடன் இணைந்து ‘மாப்பிள்ளை’ என்ற தொடரில் நடித்தார். அதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திருமணத்துக்கு பிறகும் இவர்கள் இருவரும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் செந்தில் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சீரியல் சூட்டிங் எல்லாம் மூடப்பட்டு உள்ளது. இதனால் நடிகர்கள் எல்லோரும் வீட்டிலேயே உள்ளனர். அந்த வகையில் நடிகர் மிர்ச்சி செந்திலும் அவரது மனைவி ஸ்ரீஜாவும் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதையும் பாருங்க : lockdown, கேப்டனுக்கு ஷேவிங் முதல் பிளீச்சிங் வரை செய்த மனைவி. வைரலாகும் வீடியோ.
அந்த வீடியோவில் நடிகர் மிர்ச்சி செந்திலுக்கு பின்னால் அவரது மனைவி ஸ்ரீஜா ஒழிந்து கொண்டு நின்றிருந்தார். அந்த வீடியோவில் மிர்ச்சி செந்தில் அவர்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று தமிழில் கூறி இருந்தார். அதே போல அவருடைய மனைவி ஸ்ரீஜா மலையாளத்தில் விஷு வருட வாழ்த்துக்களை கூறி இருந்தார். பிறகு மிர்ச்சி செந்தில் தன்னுடைய மனைவி போலவே மலையாளத்தில் புது வருட வாழ்த்துக்களை கூற முயற்சி எடுத்தார்.
ஆனால், அவருக்கு கரெக்டாக உச்சரிப்பு வரவில்லை. அவர் பல முறை சொல்லிப் பார்த்தால் சரியாக வரவில்லை. தற்போது இந்த வீடியோவை பார்த்த பலர் திருமணம் ஆகி 6 வருஷம் ஆகியும் மலையாளம் பேச முடியாமல் தவித்து வருகிறார் மிர்ச்சி செந்தில் என்று ரசிகர்கள் கமெண்ட் கூறி வருகிறார்கள். தற்போது இவர் “நாம்-இருவர்-நமக்கு-இருவர்” என்ற தொடரில் நடிக்கிறார். அதுவும் இந்த தொடரில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இந்த சீரியலில் நடிகர் செந்தில் அவர்கள் ‘மாயன் (ரவுடி), அரவிந்த் ( மருத்துவர்)’ என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.