விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் 'சரவணன் மீனாட்சி ' தொடர் 3 சீசன்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த தொடரின் இரண்டாவது சீசனில் சரவணனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் இர்பான்.

இவர் ஏற்கனவே கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் ஸ்கூல் பையனாக சின்னத்திரைக்கு வந்தவர். இந்த சீரியல் கல்லூரி, பள்ளி மாண மாணவிகளை மிகவும் ஈர்த்தது. அதன் பின்னர் ஜோடி நிகழ்ச்சியில் பங்குபெற்ற இவர், சீரியலை விட்டு விட்டு சினிமாவுக்கு வந்துவிட்டார்.
இதையும் படியுங்க : கனா காணும் காலங்கள் பச்சை என்ன பன்றார் தெரியுமா ? தற்போதய நிலை !
இதுவரை பட்டாளம், எதிர் வீடு, ரூ, பொங்கி எழு மனோகரா போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், இதில் எந்த படமும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. ஆனாலும் சுண்ணாட்டம் படம் தான் அவருக்கு ஓரளவிற்கு சொல்லும்படியாக அமைந்தது. தற்போது 'ராஜாவுக்கு செக்' படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

இந்த படத்தில் சேரன் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோ போல நடித்து வந்த இர்ஃபான் தற்போது வில்லனாக மாறியுள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் எப்போதோ வெளியான நிலையில் இன்னும் இந்த படம் திரைக்கு வந்த பாடில்லை.





