அவர் வாங்கின வீட்ட அவர் நடிச்ச சீரியல் ஷூட்டிங்க்கு வாடகைக்கு விட்டு வயித்த கழுவுறேன் – ராஜசேகர் மனைவி கண்ணீர்.

0
16115
rajasekar
- Advertisement -

சினிமாவிலும், சீரியல்களிலும் என் கணவரைப் போலவே இன்றைக்கும் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் என்னுடைய வாழ்க்கை ஒரு பாடமாக இருக்கட்டும் என்று மனவேதனையுடன் பிரபல நடிகரின் மனைவி தாரா ராஜசேகர் பேட்டி அளித்துள்ளார். இவரின் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோலிவுட் வட்டாரத்தில் மிக பிரபலமான ஒளிப்பதிவாளர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர், நடிகர் என பல முகங்களைக் கொண்டவர் நடிகர் ராஜசேகர். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே செப்டம்பர் மாதத்தில் தான் காலமானார். இவருடைய மனைவியின் பெயர் தாரா.

-விளம்பரம்-
சீரியலில் ராஜசேகர்

இவர்களுக்கு பிள்ளைகள் யாரும் இல்லை. இந்நிலையில் தன்னுடைய கணவர் இறந்த பிறகு தன் நிலை குறித்து தாரா ராஜசேகர் அவர்கள் தற்போது பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, சினிமாவிலும் சீரியலிலும் மிக பிரபலமானவர் என் கணவர். பொதுவாகவே எல்லா நேரத்திலும் காசு கிடைக்காது.

- Advertisement -

அதனால் கிடைக்கும் நேரத்தில் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், என் கணவரோ அதை எல்லாம் யோசிக்காமல் அக்கா, தங்கைகள் என்று நிறைய செலவு செய்து விட்டார். தனக்கென்று வீடு வாசல் கூட வாங்காமல் இருந்தார். பின் கடைசி காலத்தில் நான் இல்லாவிட்டால் என் மனைவி எப்படி இருப்பார் என்று காலம் போன கடைசியில் லோன் போட்டு வீட்டை வாங்கியிருந்தார்.அந்த வீட்டில் ஒரு நாள்கூட அவர் வசிக்கவில்லை. கிரகப்பிரவேசம் செய்வதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். கடைசி கட்டத்தில் மருத்துவ செலவிற்கு கூட பிறரை கையேந்தும் நிலைக்கு நான் தள்ளப்பட்டேன்.

சொந்தபந்தங்கள், அவருடன் வேலை செய்த பிற நடிகர்கள் என யாரும் உதவாத நிலையில் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். அவர் சென்ற பிறகு அவர் வாங்கி வைத்த கடன்தான் மிச்சமிருக்கிறது. காலையில் எழுந்தவுடனே லோன் கட்டுங்கள் என்று வீட்டு வாசலில் வந்து நிற்கிறார்கள். ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையில் நான் இருக்கிறேன். டிவி சினிமாவில் என்னுடைய கணவர் நடித்திருந்தாலும் அவருக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. நடிகர் சங்கமும் சரி, நடிகர்களும் சரி யாரும் உதவி செய்யவில்லை. பல முறை போராடினேன் எந்த உதவியும் கிடைக்கவில்லை.

-விளம்பரம்-

பிறகு தான் வேற வழியில்லாமல் அவர் வாங்கிய வீட்டை சத்யா சீரியல் தயாரிப்பாளர்களுக்கு வாடகைக்கு விட்டு விட்டு கொஞ்சம் தள்ளி ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்து நான் வாழ்ந்து வருகிறேன். அவர்கள் தருகிற வாடகையில் தான் பாதி என் வீட்டு வாடகைக்கும் மீதி என்னுடைய வயிற்றுக்கும் செலவு செய்து வருகிறேன். எத்தனை நாட்களுக்கு இந்தப் பிழைப்பு என்று தெரியவில்லை.

என்னுடைய நிலைமை குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், என் பிரச்சினையை அவரிடம் சொல்ல கூட எனக்கு ஆதரவாக யாரும் இல்லை. இதன் மூலமாவது முதலமைச்சர் என்னுடைய பிரச்சினையை கவனித்து கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எனக்கு ஏதாவது வழி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று மன வலியுடன் கோரிக்கை வைத்திருக்கிறார்.

Advertisement