-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

‘நீயா நானாவால் இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல’ – சரவணன் மீனாட்சி சீரியலின் ‘ஏலோ ஏலேலோ’ பாடகி நெகிழ்ச்சி

0
794

நீயா நானா நிகழ்ச்சியில் சரவணன் மீனாட்சி சீரியலின் டைட்டில் பாடலை பாடிய பாடகி கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் மிக பிரபலமான நிகழ்ச்சி “நீயா நானா”. நீயா நானா கோபிநாத் என்று சொன்னாலே போதும் சின்ன குழந்தைகள் கூட அடையாளம் சொல்லுவார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர் கோபிநாத்.

-விளம்பரம்-

இவர் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். 2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் “நீயா ஆண்டு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார். ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நிகழ்ச்சி தான் “நீயா நானா” நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

நீயா நானா நிகழ்ச்சி:

சமுதாயத்தில் உள்ள பழமை வாதங்களுக்கு எதிராக இவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.அதிலும் அழகு, பெண்கள், காதல், திருமணம், குடும்பம், நட்பு, ஆண்கள், பெண்கள், அரசியல், சட்டம், நட்பு, கல்வி விளையாட்டு, சமூக ஊடகம் என்று பல தலைப்புகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பின்னணி பாடகிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது மக்கள் விரும்பி ரசித்து கேட்ட பாடல்களுக்கு சொந்தக்காரர்களை முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி இருந்தார்கள்.

சரவணன் மீனாட்சி சீரியல் பாடகி:

-விளம்பரம்-

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் பாடகி பிரியா பிரகாஷ். இன்றும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டிருக்கும் சரவணன் மீனாட்சி சீரியலின் ஏலேலோ பாடலை பாடியவர் இவர் தான். ஆனால், இது பலருக்கும் தெரியாமல் இருந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் இந்த பாடலை பாடினார் என்று தெரிய வந்தது. மேலும், இந்த சீரியலுக்கு முன்பாக மதுரை என்கிற சீரியலில்
இவரை பாட கேட்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

இவர் பாடி கொடுத்துவிட்டார் வந்தார். அதற்குப் பின் ஒரு நாள் ஒருவரின் போனிலிருந்து ரிங்டோன் ஆக இவருடைய குரல் கேட்டது. அப்போதுதான் இவருக்கு இது நாம் பாடிய பாடல் எப்படி கிடைத்தது என்று கேட்டிருந்தார். அந்த நபர் இது விஜய் டிவியில் வரும் சரவணன் மீனாட்சி சீரியல் பாடல். நீங்கள் போய் முதலில் கேளுங்கள் என்று சொன்னாராம். பிறகு இந்த சீரியலில் வந்த பாடலை கேட்டு பிறகு பிரியா அதிர்ச்சி அடைந்தாராம். ரொம்பவே சந்தோஷமாக இருந்ததார். ஆனால், இது தனக்கு தெரியாமலேயே நடந்து நினைத்துதான் வருத்தப்பட்டார்.

ப்ரியா பிரகாஷ் திரையப்பயணம்:

அது மட்டும் இல்லாமல் இவர் உலகநாயகன் கமலஹாசன் நடித்த தசாவதாரம் படத்தில் முகுந்தா முகுந்தா என்ற பாடலில் பாட்டியின் குரலில் பாடியிருக்கிறார். அதேபோல இவர் பல திரைப்படங்களில் இடையில் வரும் வசனங்களையும் பாடி அசத்திருக்கிறார். மேலும், என்னை அறிந்தால் திரைப்படத்தில் வா ராஜா வா வா என்ற பாடல் இவர்தான் பாடியிருக்கிறார். இப்படி 30 வருடங்களாக இவர் பாட்டு பாடி கொண்டு இருக்கிறார். ஆனால், இதுதான் இவர் பாடிய பாடல் என்று பலருக்கும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் நீயா நானா நிகழ்ச்சியின் போது இவர் பாடிய பாடல்கள் எல்லாம் தெரியவந்தது நினைத்து ப்ரியா சந்தோஷத்தில் இருக்கிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news