விருது கொடுத்த அசிங்கப்படுத்திய விஜய் டிவி ! கவலையில் சரவணன் மீனாட்சி ரச்சிதா ! ஏன் தெரியுமா

0
2232

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்புகி கொண்டிருக்கும் சரவணன் மீனாட்சி என்ற தொடர் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை மூன்று சீசன்களை கடந்துள்ள இந்த தொடரின் முதல் பாகத்தில் செந்தில் மற்றும் பூஜா நடித்திருந்தனர்.

sravanan meenatchi

அதன் பின்னர் வந்த அனை த்து பாகத்திலும் சரவணன் கதாபாத்திரம் மாறினாலும் மீனாட்சியின் கதாபாத்திரத்தில் ரச்சிதா மட்டுமே நடித்துவருகிறார். இந்நிலையில் தற்போது சரவணன் மீனாட்சி நிகழ்ச்சி 1௦௦௦ எபிசோடிற்கும் மேல் ஓடி சாதனை படைத்துள்ளது.

இந்த வெற்றியை சரவணன் மீனாட்சி குழு கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விஜய் டிவி சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்று நடத்தியது. அந்த விழாவில் சரவணன் மீனாட்சியில் நடித்த ரச்சிதாவிற்கு “சிறப்பு டெடிகேஷன் விருது ” வழங்கப்பட்டது அதனை பெற்றுக்கொண்ட ரச்சிதா “நான் ஏற்கனவே தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் சரவணன் மீனாச்சியில் நடித்ததற்காக சிறந்த நடிகை என்ற விருதினை பெற்றுள்ளேன்.

saravanan meenatchi

அனால் தற்போது அளிக்கப்பட்டுள்ள இந்த விருது நான் இரண்டு ஆண்டுகளாக நடித்தது போதும் என்று எண்ணி எனக்கு அளித்துள்ளார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது. மேலும் இந்த சீரியலில் இருந்து என்னை விலக கோரியே இந்த விருதை தமக்கு வழக்கப்பட்டதாக நான் கருதுகிறேன் என்று தெரிவித்திருந்தார். மேலும் சரவணன் மீனாட்சியில் நடிப்பது எனக்கு மிகவும் பிடித்துள்ளது ஆகையால் விஜய் டிவி யே என்னை கழுத்தை பிடித்து தள்ளும் வரை நான் அந்த சீரியலில் இருந்து விலக மாட்டேன் என்று கூறியுள்ளார்.