விஜய்யை பார்க்க போக கூடாதுனு கணவரோட சண்ட. மண்டையில் அடி பட்டுடிச்சி. சரவணன் மீனாட்சி நடிகை பேட்டி.

0
5040
senthil-kumari

சரவணன் மீனாட்சி சீரியலில் செல்லமான அம்மாவாகவும், அவ்வப்போது கோபமான மாமியாராகவும் தன்னுடைய நடிப்பின் மூலம் அனைவரின் மனத்திலும் இடம் பிடித்தவர் நடிகை செந்தில்குமாரி. இவர் சின்னத்திரையில் மட்டும் இல்லாமல் வெள்ளித்திரையில் பரீட்சயமானவர். அதோடு சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் இவர் தனக்கென ஒரு முத்திரையைப் பிடித்து உள்ளார். இவருடைய சொந்த ஊர் மதுரை. திருமணத்திற்குப் பிறகு தான் இவர் நடிப்பு துறைக்கு வந்தார். முதலில் இவர் சென்னைக்கு வேலை தேடி தான் வந்தார். பின் இவருக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக சினிமாவிற்குள் நுழைந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். இவருடைய தங்கச்சி நடிகை மீனாள். இவர் தங்கச்சி மூலமாகத் தான் இவருக்கு மீடியாவிற்கு அறிமுகமானார்.

வீடியோவில் 23:45 நிமிடத்தில் பார்க்கவும்

தற்போது நடிகை செந்தில்குமாரி அவர்கள் எல்லோருக்கும் தெரிந்த பரிச்சயமான முகமாக உள்ளார். அதுமட்டுமில்லாமல் இவருடைய கணவரின் நண்பர் தான் இயக்குனர் ராம். அதற்குப் பிறகு தான் இயக்குனர் ராம் படத்தில் இவர் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பசங்க படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் பிரபலமானவர் நடிகை செந்தில் குமாரி. இந்த படத்திற்கு பிறகு இவரை அனைவரும் பசங்க செந்தி என்று தான் அழைத்தார்கள். இவர் தன்னுடைய கீச்சுக் குரலாலும், எதார்த்தமான நடிப்பாலும் மக்கள் மத்தியில் பிரபலமானர். இவர் படங்களில் பொதுவாக அம்மா, அண்ணி என குணச்சித்திர வேடங்களில் தான் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : கதை பிடித்து போனதும் பைக் வாங்கி கொடுத்துட்டார். அஜித் குறித்து பேசிய இயக்குனர். வைரலாகும் வீடியோ.

- Advertisement -

விஜய் மெர்சல், மதுர வீரன், சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நடித்து உள்ளார். இவர் வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து உள்ளார். சரவணன் மீனாட்சி தொடருக்கு பிறகு இவர் சினிமாவில் பிசியாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை செந்தில் குமாரி அவர்கள் தன்னுடைய இளம் வயதில் நடைபெற்ற ஒரு சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, நான் திருமணத்திற்கு பிறகு தான் சினிமாவில் நடிக்க வந்தேன். அப்போது எனக்கு விஜய்யை ரொம்ப பிடிக்கும்.

Image result for serial actress senthil kumari

-விளம்பரம்-

எனக்கு நீண்ட நாட்களாகவே விஜயை பார்க்க வேண்டும், அவருடன் பேச வேண்டும் என்று ரொம்ப ஆசை திருப்பாச்சி படத்தில் என்னுடைய சகோதரி ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் மூலம் தான் விஜயை சந்திக்க வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதனால் நானும் அவரை நேரில் பார்க்க தயாராகி ஆசையோடு கிளம்பினேன். ஆனால், என் கணவர் என்னை போக கூடாது என்று தடுத்தார். பின் எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. இதனால் அவர் என்னை கீழே தள்ளி விட்டு என் தலையில் அடிபட்டு ரத்தம் வந்து விட்டது. அதையும் மீறி நான் சண்டை போட்டுக் கொண்டு விஜயை பார்க்க வந்தேன் என்று கூறியுள்ளார்.

Advertisement