ஆபாச கானா பாடகர் கைது – தண்டனையை பார்த்து நெட்டிசன்கள் அதிருப்தி. என்ன நடந்துள்ளது பாருங்க.

0
583
saran
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் எட்டாம் வகுப்பு மாணவியை கரபமாக்குவேன் என்று மேடையில் கானா பாடகரின் வீடியோவை பகிர்ந்து அவர் மீது போஸ்க்கோ சட்டம் பாய வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுதது வந்த நிலையில் அந்த கானா பாடகர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். தமிழ் நாட்டில் கானா பாடல் ஒரு முக்கிய கலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. தேவா துவங்கி தற்போது இருக்கும் கானா பாலா வரை பல கானா பாடகர்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர்கள் தான்.

-விளம்பரம்-

இந்த நிலையில் கானா பாடகர் ஒருவர் மேடையில் 8 ஆம் வகுப்பு சிறுமியை கற்பமாக்குவேன் என்ற வரிகளை அடங்கிய கானா பாடலை பாடிய வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோ டோனி ராக் எ போட்டி கானா என்ற பெயரில் கடந்த 2020 மார்ச் மாதம் வெளியாகியிருக்கிறது. அதில் சரவெடி சரண் மற்றும் டோனி ராக் ஆகிய இரு கானா பாடகர்கள் பாடல் பாடுகின்றனர். 

- Advertisement -

சிறுமிகள் குறித்து கேவலமான வரிகள் :

அப்போது புல்லிங்கோ ஹேர் சட்டையில் இருக்கும் சரவெடி சரண் பாடும் போது “மஜாவாக மாட்டிக்கிச்சு எனக்கு ஏத்த லடுக்கி (சிறுமி) பால்வாடியில வாங்கி கொடுத்தேன் பூந்திய, எட்டாவது பாஸாயிட்டு எடுக்க வச்சேன் வாந்தியை.” என பாடியுள்ளார் இந்த வீடியோ தான் தற்போது இவரை போலீஸ் தேடும் அளவிற்கு வம்பில் சிக்க வைத்து இருக்கிறது. இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எச்சரித்த எஸ் பி :

இதுகுறித்து பதிவிட்ட ட்விட்டர் வாசி ஒருவர், ‘8 வது படிக்கும் சிறுவயது சிறுமியை கர்பமாக்குவோம், ஏன்னா அப்போ தான் எங்கள விட்டு போவாது,பெண்கள் இந்த நாடக காதல் கும்பலிடம் ஜாக்கிரதையாக இருங்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த வீடியோ திருவள்ளூர் எஸ்.பி., வருண் குமார் கவனத்திற்கு சென்றுள்ளது. அந்த பாடலை பாடியவர்கள் விவரங்களை சேகரித்து வருவதாக வருண் குமார் தெரிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

சரவெடி சரண் கைது

போக்சோ சட்டத்தின் 16-வது பிரிவை கவனத்தில் கொள்ளும்படி மற்றவர்களுக்கும் அறிவுறுத்தி இருந்தார். அதே போல நெட்டிசன்கள் பலர் இப்படி பெண் குழந்தைகளை கேவலப்படுத்தும் வகையில் பாடி இருக்கும் இவர் மீது கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரவெடி சரணை திருவள்ளூர் போலீசார் கைது செய்தது. அவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

2 மணி நேரத்தில் வெளியில் வந்த சரண் :

போலீஸ் ஸ்டேஷனுக்கு தன் ஆட்களுடன் ஜாலியாக வந்த சரண், காவல் நிலையத்தின் உள்ளையேயும் எந்த ஒரு பயமும் இல்லாமல் நின்று கொண்டு இருந்தார். இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 2,3 மணி நேரத்தில் போலீசார் காவல் நிலை பிணையில் விடிவத்தினர். மேலும், இது போல இனி பாட கூடாது என்று அவரிடம் எழுத்துப் பூர்வமாக கடிதத்தை வாங்கி இருக்கின்றனர். மேலும், தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு தெரிவித்த சரண் போலீஸ் நிலையத்தில் இருந்து தன் நண்பர்களுடன் சிரித்தபடியே வெளியில் வந்துவிட்டார்.

Advertisement