‘5கிமீ நடந்து ஸ்கூலுக்கு போறோம்’ சிறுமி வைத்த கோரிக்கையால் ஊருக்கே கிடைத்த பஸ் வசதி

0
219
- Advertisement -

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்ற இரண்டு பிரிவுகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளராக தர்ஷினி கலந்து கொண்டிருக்கிறார். இவர் திண்டிவனம் அருகில் உள்ள அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்.

-விளம்பரம்-

இவர் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இவர் சரிகமப நிகழ்ச்சியில் தான் இருக்கும் பகுதியை சுற்றி உள்ள சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். இது நடுவர்களை மட்டும் இல்லாமல் பார்ப்போரையும் கண்கலங்க வைத்து இருந்தது. அதாவது, அம்மணம்பாக்கத்தில் தொடக்கப்பள்ளி மட்டும் தான் இருக்கிறது. அதற்கு மேலும் படிக்க வேண்டும் என்றால் எல்லோருமே 5 km நடந்து அனந்தமங்கலம் பகுதியில் இருக்கிற பள்ளிக்கு தான் போகணும்.

- Advertisement -

தர்ஷினி ஊர்:

அதுவும் குழந்தைகள் பள்ளிக்கு போவதற்கு பஸ் கூட கிடையாது. இதனால் தினமும் ஐந்து கிலோ மீட்டர் நடந்து சென்று தான் பள்ளிக்கு செல்கிற அவல நிலைமை இருக்கிறது. இதை அறிந்து பலருமே வந்து விசாரித்தார்கள். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பள்ளிக்கூடத்திற்கு கல்வி கற்க சென்றதால் தான் இன்று இந்த நிகழ்ச்சியில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதுபோன்ற வாய்ப்புகள் அம்மணம்பாக்கத்தில் உள்ள மற்ற குழந்தைகளுக்குமே கிடைக்கணும். எங்கள் ஊருக்கு பஸ் வசதி வேண்டும் என்று ரொம்ப எமோஷனலாக தர்ஷினி பேசியிருந்தார்.

தர்ஷினி தந்தை பேட்டி:

உடனே நிகழ்ச்சியின் நடுவர், அம்மணம்பாக்கம் கிராமத்திற்கு பஸ் வசதி ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். ஊரில் உள்ள அனைத்து பேருடைய வாழ்க்கையும் மாற வேண்டும் என்றெல்லாம் பேசி இருந்தார்கள். இதை அடுத்து இது தொடர்பாக அளித்த பேட்டியில் தர்ஷினியின் தந்தை, நான் பம்பை அடிப்பவன். அப்போது நாங்கள் பாடுவதை பார்த்து தான் தர்ஷினிக்கும் பாட ஆர்வம் வந்தது. ரொம்பவே அருமையாக தர்ஷினி சாமி பாடல்கள் எல்லாம் பாடுவார். தர்ஷினியின் திறமையை கவனித்த பள்ளி வாத்தியார் ஒருவர், மற்ற பள்ளிகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துக் கொண்டு போவார்.

-விளம்பரம்-

தர்ஷினி ஊர் மக்கள் நிலைமை:

அப்படித்தான் பல இடங்களில் தர்ஷினிக்கு பாட வாய்ப்பு கிடைத்தது. தர்ஷினி படிக்கிற பள்ளி அனந்தமங்கலத்தில் இருக்கிறது. பள்ளிக்கூடம் போக பஸ் வசதி இல்லை. பிள்ளைகள் தினமும் பள்ளிக்கூடத்திற்கு நடந்து போயிட்டு திரும்ப நடந்து வருகிறார்கள். பிள்ளைகள் தனியாக அவ்வளவு தொலைவு போயிட்டு வருவது தினமும் பயமாக இருக்கிறது. இதை நான் என்னுடைய குழந்தைக்காக மட்டும் பேசவில்லை. தர்ஷினி பள்ளிக்கூடத்துக்கு போனதனால் தான் இன்று இந்த மேடையில் வந்து பாடுகிறார். பஸ் வசதி எங்க ஊரில் இருந்தால் மற்ற குழந்தைகளோட கல்வியுமே மாறும். பள்ளிக்கூடத்தை தாண்டி ஏதாவது ஒரு அவசரத்துக்கு போகணும் என்று நினைத்தாலுமே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று ரொம்ப எமோஷனலாக பேசியிருந்தார்.

தர்ஷினி பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் தற்போது தர்ஷினியின் அம்மணம்பாக்கம் ஊருக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக அளித்த பேட்டியில் தர்ஷினி, எங்கள் ஊருக்கு பஸ் வழங்கி இருக்கிறார்கள். பேருந்தை வழங்கிய ஜீ தமிழுக்கும், ஏற்பாடு செய்தவர்களும் ரொம்ப நன்றி. இதன் மூலம் எங்கள் ஊரில் படிக்கும் எல்லா மாணவர்களுமே ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள் என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement