சிவகார்த்திகேயன் பற்றி சரிகமப மகதி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு விதமான பாடல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பாடல் நிகழ்ச்சி தான் சரிகமப. இந்த நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பாடகர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகளும் கிடைத்து இருக்கிறது. அர்ச்சனா தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்ற இரண்டு பிரிவுகளில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சியின் ஜூனியர் கான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி நடைபெற்றது. சில வாரங்களுக்கு முன் தான் இந்த நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியின் உடைய இறுதிச் சுற்றுக்கு 6 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
சரிகமப நிகழ்ச்சி:
இதில் திவினேஷ் தான் டைட்டில் பட்டத்தை வென்றிருந்தார். இவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இவருக்கு மெல்லிசை இளவரசன் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் தான் திவினேஷிக்கு டைட்டில் பட்டதை வழங்கியிருந்தார். இவரை அடுத்து இரண்டாவது இடத்தை யோகஸ்ரீ மற்றும் மூன்றாவது இடத்தை ஹேமித்ரா பிடித்திருந்தார்கள். மேலும், இந்த ஆறு போட்டியாளர்களில் ஒருவர் தான் மகதி. இவரும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பாடி வந்தார். ஆனால், இவரால் வெற்றி பெற முடியவில்லை.

மகதி பேட்டி:
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் மகதி சின்ன வயதில் இருந்தே எனக்கு பாடுவது என்றால் ரொம்ப பிடிக்கும். நான் அதிகமாக பாடல்கள் தான் கேட்பேன். வீட்டில் எப்போதுமே அம்மா பாடிக்கொண்டு தான் இருப்பார். ஆனால், அம்மா பாடகர் கிடையாது. அம்மாவுக்கு பாடுவது ரொம்ப பிடிக்கும். அவர்களிடம் இருந்து தான் நானுமே பாடுவதற்கு கற்றுக் கொண்டேன். சரிகமப நிகழ்ச்சி ரொம்ப ஜாலியாக இருந்தது. இப்ப சரிகமப செட்டை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். ஶ்ரீமதி, ஹேமித்ரா, அபினேஷ் என்று எல்லா போட்டியாளர்களுமே எனக்கு நண்பர்கள் தான்.
https://www.youtube.com/watch?v=Kk12tlnkB0s
நிகழ்ச்சி பற்றி சொன்னது:
அப்பா, அம்மா, தாத்தா எல்லோரும், நீ பைனல்ஸ் வரைக்கும் வந்ததே பெரிய விஷயம். டைட்டில் நமக்கு முக்கியமில்லை. இதுவே போதும் என்று எனக்கு ஆறுதல் சொன்னார்கள். இந்த நிகழ்ச்சியில் வந்த புவனேஷ் என்னுடைய பிரண்டு தான். நாங்கள் எல்லோருமே புவனேஷ் தான் செலக்ட் ஆகுவான் என்று நினைத்து இருந்தோம். ஆனால். அவன் செலக்ட் ஆகவில்லை. அந்த தரத்தில் அவனுடைய முகமே மாறிவிட்டது. அவன் சிரித்தான். ஆனால், அந்த சிரிப்பு சரியாகவே இல்லை. அவன் கஷ்டப்பட்டு கொண்டிருந்தான். அதனால் தான் அவனுக்கு என்னுடைய கிரீடத்தை கொடுத்தேன். அவனோட ஸ்பெஷலான விஷயமே டான்ஸ் தான். அவன் ஒரு ஸ்டெப் போடுவான். அந்த மாதிரி வேறு யாராலையுமே போட முடியாது. பைனலுக்கு சிவகார்த்திகேயன் சார் வந்து இருந்தார். அவர் வருவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

சிவகார்த்திகேயன் பற்றி சொன்னது:
அவர் என்னிடம், சின்னத் தாயவள் என்ற பாடல் பாட சொன்னார். அந்த பாடல் கேட்டதுமே அப்போவே அவர் அழுதுவிட்டார். அவர் ஏன் அழுதார்? என்று தெரியவில்லை. மேலும், எஸ்பிபியின் மண்ணில் இந்த காதல் பாடலை மூச்சு விடாமல் பாடி இருந்தேன். அந்த பாடலை பாடுவதற்கு அப்பதான் காரணம். இந்த பாடலை கொடுத்து விட்டார்கள் எப்படி பாடுவது என்று அப்பாவிடம் புலம்பி கொண்டிருந்தேன். அப்போது அப்பா என்னை நீச்சல் அடிப்பதற்கு கூட்டிட்டு போனார். அதன் மூலமாகத்தான் மூச்சு விடாமல் பாடுவதற்கு கற்றுக் கொண்டேன். எஸ்பிபி சரண் சார், இந்த பாடலை நீ பாடுவன்னு நான் எதிர்பார்க்கவில்லை. இந்த ஸ்காமை நீ ரிவில் பண்ணிட்டாய் என்று சொன்னார். அதே மாதிரி சைந்தவி மேம், மகதி எங்களுக்கு கிடைத்த லக்கி சாம்ன்னு சொன்னார்கள் என்று பல விஷயங்களை
பகிர்ந்திருக்கிறார்.






