எஸ்பிபியின் பாடலை சரிகமப நிகழ்ச்சியில் சிறுமி மூச்சு விடாமல் பாடி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு விதமான பாடல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. வருடம் வருடம் வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் பல வருடமாக விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

அதேபோல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பாடல் நிகழ்ச்சி தான் சரிகமப. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பாடகர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகளும் கிடைத்து இருக்கிறது. வழக்கம்போல் அர்ச்சனா தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்ற இரண்டு பிரிவுகளில் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ஜூனியர் கான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4:
மேலும், இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், எஸ்பிபி சரண், சைந்தவி, ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று இகிறார்கள். ஒவ்வொரு வாரமும் விதவிதமான வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் இசை சாம்பவான்களான எஸ்பிபி, மலேசியா வாசுதேவன், ஏசுதாஸ் ஆகியோர்களின் பாடல்களை பாடும் சுற்று தான் நடைபெற இருக்கிறது.

லெஜெண்ட்ரி சுற்று:
இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கங்கை அமரன், யுகேந்திரன் வாசுதேவன் கலந்து இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் நிகழ்ச்சியில் சிறுமி மூச்சு விடாமல் பாடியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, எஸ்பிபி மூச்சு விடாமல் பாடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் பல பாடல்களை அந்த மாதிரி தான் பாடிருக்கிறார்.
மஹதி பாடிய பாடல்:
அந்த வகையில் இவர் பாடிய 'மண்ணில் இந்த காதல் இன்றி' என்ற பாடல் மிகப் பெரிய அளவில் வைரல்.
இந்தப் பாடலை அவ்வளவு எளிதில் யாராலும் பாடி விட முடியாது. தற்போது சரிகமப நிகழ்ச்சியில் மஹதி என்ற சிறுமி இந்த பாடலை மூச்சு விடாமல் பாடி அசத்தியிருக்கிறார். இதை பார்த்த எஸ்பிபியின் மகன் சரண் மற்றும் நடுவர்கள் அனைவருமே வியந்து மஹதியை பாராட்டி இருந்தார்கள்.
https://www.youtube.com/watch?v=ovWm0Zsl1lU
சரண் சொன்னது:
அது மட்டும் இல்லாமல் சந்தோஷத்தில் மஹதியை தூக்கி முத்தமிட்ட சரண், என்னுடைய அப்பா இந்த பாட்டை மூச்சு விடாமல் எல்லாம் பாடவில்லை. அதை அவரே பல இடங்களில் சொல்லியிருக்கிறார். ஆனால், மஹதி ஒற்றை மூச்சில் இந்த பாட்டை பாடி இருப்பது மிகப்பெரிய விஷயம். ரொம்ப பெருமையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இவரை அடுத்து சிறப்பு விருந்தினராக வந்த கங்கை அமரனும் மஹதியை வாழ்த்தியிருக்கிறார். தற்போது இது தொடர்பான ப்ரோமோ வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.






