டோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. தற்போது நடிகர் மகேஷ் பாபு அவர்கள் ‘சரிலேரு நீகேவாரு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் அனில் ரவி புடி. தற்போது இயக்குனர் அனில் ரவி புடி அவர்களுக்கு குழந்தை பிறந்து உள்ளது என தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதோடு தெலுங்கில் மிக பிரபலமான இயக்குனர் அனில் ரவி புடி ஆவார். இயக்குனர் அனில் ரவி புடி அவர்கள் திரைப்பட இயக்குனர் மட்டும் இல்லாமல் எழுத்தாளரும் ஆவார். இவர் முதலில் திரை பட எழுத்தாளராக தான் பணி புரிந்தார்.
பின்னர் தான் இவர் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதற்கு பிறகு அனில் ரவி புடி அவர்கள் சுப்ரீம், ராஜா தி கிரேட், F2 ஆகிய தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். அடுத்ததாக இவர் F3 என்ற படத்தை இயக்க தயாராக உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இவருடைய மனைவி பார்கவி . இந்நிலையில் இயக்குனர் அனில் ரவி புடி அவர்களின் மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அது மட்டும் இல்லாமல் இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை பிறந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் இவர் ராணுவ வீரராக நடித்து உள்ளார். இவர் 90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை விஜயசாந்தி அவர்களும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். ‘சரிலேரு நீகேவாரு’ என்ற படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கி உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், ராஜேந்திர பிரசாத், ரோகிணி உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். ரத்தினவேலு என்பவர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து உள்ளார். இந்த படம் ஜனவரி மாதம்11 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்கிற்கு வெளியாகும் என்று அதிகாரப் பூர்வமாக படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள்.
மேலும், இந்த படத்திற்கு மகேஷ் பாபு வாங்கிய சம்பளத்தை கேட்டு அனைவரும் அதிர்ந்தார்கள் என்று கூட சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி வந்தது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் அவர்கள் இசையமைக்கிறார். ரத்தினவேலு அவர்கள் ஒளிப்பதிவு செய்து உள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் GMB எண்டர்டெயின்மெண்ட் மற்றும் AK எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகிறது. அதோடு இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், மிகுந்த எதிர்பார்ப்பையும் அதிகரித்து உள்ளது.