சர்கார் படத்தால் கிடைத்த நிவாரண நிதி..!எத்தனை லட்சம் தெரியுமா..!

0
261
sarkargaja

தமிழகத்தில் ஏற்பட்ட ‘கஜா’ புயல் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களின் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. வீடுகளை இழந்து தவித்து வரும் மக்களுக்கு, தமிழக அரசு ஒருபுறம் நிவாரணம் வழங்கிவந்தாலும், தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாகச் சென்று உதவிகள் வழங்கிவருகின்றனர்.

அந்த வகையில் திரைப் பிரபலங்களும் டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.இந்நிலையில் நடிகர் விஜய் தனது நற்பணி மன்றம் சார்பாக 7 மாவட்டங்களுக்கு 4 முதல் 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சர்கார்’ திரைப்படத்தின் ஒரு நாள் வசூலை கஜா புயல் நிவாரண நிதிக்கு அளிப்பதாக சர்க்கார் படத்தின் அமெரிக்க உரிமையை வாங்கியுள்ள ஏ அண்ட் பி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அந்த தொகை சுமார் 6 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.