சர்கார் படத்தில் இந்த பாடல் தான் Powerfull..! அதிரவைக்கும் தகவல்.!

0
982
Sarkar
- Advertisement -

இளையதளபதி விஜய் நடித்து வரும் “சர்கார்” படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. கடைசியாக அமெரிக்காவில் நடைபெற்ற படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பாடல் காட்சி ஒன்றில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

- Advertisement -

அமெரிக்காவில் எடுக்கப்பட்ட பாடல் காட்சி “சர்க்கார்” படத்தின் முதல் பாடல் என்றும் அதில் நடிகை வரால்க்ஷ்மியும் இருப்பார் என்று ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகி இருந்தது. அதே போல படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த சில நாட்களாக “சர்கார்” படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில பிரத்யேக புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருக்கிறது.

இந்நிலையில் நேற்று(ஆகஸ்ட் 29) ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தனர். இந்த பாடல் “சர்கார்” படத்தில் மிகவும் முக்கியமான பாடல் என்றும், இந்த பாடலுக்காக சென்னை முட்டுகாடு பகுதியில் பிரம்மாண்ட செட் அமைக்கபட்டு, பல்வேறு கலைஞர்களை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 5 இரவுகள் இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இந்த பாடலில் அரசியல் சம்மந்தபட்ட பல வரிகள் இடம்பெற்றுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த பாடலை “மெர்சல்” படத்தில் ஆலப்போறான் தமிழன் பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். மேலும், இந்த பாடலுக்கு நடன இயக்குனராக ஷாபி பணியாற்றியுள்ளார். இவர் ஏற்கனவே , நடிகர் விஜய்யின் பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement