கேரளாவில் பாகுபலிக்கு பிறகு சாதனை நிகழ்த்த இருக்கும் சர்க்கார்..!

0
390
sarbag

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் விஜய்க்கு தமிழில் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய் படங்கள் தமிழ் மொழியில் வெளியாவது போலவே மற்ற மொழிகளிலும் வெளியாகி வருகிறது.

Sarkar

தற்போது நடிகர் விஜய் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் “சர்கார்” படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் படு மும்மரமாக நடந்து வருகிறது.

பொதுவாக தமிழ் நாட்டில் உள்ள ரசிகர்கள் போலவே நடிகர் விஜய்க்கு கேரளாவிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இதனால் விஜய் படங்கள் என்றாலே அங்கு ஒரு தனி மாஸ் தான். இந்நிலையில் “சர்கார்” படத்தின் கேரள வெளியிட்டு உரிமம் 9 கோடி ரூபாய்க்கு பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

bagu

இதுவரை கேரள மாநிலத்தில் வேற்று மொழி படத்தின் உரிமம் அதிக கோடிகள் கொடுத்து வாங்கப்பட்டது “பாகுபலி ” படம் தான். அந்த படத்திற்கான உரிமம் கேரளாவில் 10.5 கோடி ரூபாய் விலை போனது. தற்போது பாகுபலி படத்திற்கு பின் ”சர்கார்” படம் தான் கேரளாவில் அதிக விலை கொடுத்து வாங்கப்படும் வேற்று மொழி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.