விஜய் உருவத்தில் எங்கள் சூப்பர் ஸ்டாரை பார்க்கிறோம்..!தெலுங்கு ரசிகர்கள் விஜய்க்கு புகழாரம்..!

0
804
Vijay

விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. தமிழகத்தை தாண்டி ஆந்திரா,கர்நாடக,கேரளா போன்ற போன்ற பல்வேறு மாநிலங்களில் வெளியாகியுள்ளது.தமிழகத்தை போன்றே ஆந்திராவிலும் சாதனை படைத்துள்ளது சர்கார் திரைப்படம்.

ஆந்திராவில் வெளியான இந்த திரைப்படம் இதுவரை 11 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தை பார்த்து வரும் தெலுங்கு ரசிகர்கள் சர்கார் படத்தில் வரும் கதை தற்போது உள்ள நடைமுறை அரசியல் நிலைமையை எடுத்துரைக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

பொதுவாக விஜய் படம் என்றாலே தமிழகத்தை தாண்டி கேரளாவில் தன பெருத்த வசூல் சாதனைகளை படைக்கும். ஆனால், இதற்கு மாறாக சர்கார் திரைப்படம் கேரளாவைவிட ஆந்திராவில் தான் அதிக வசூலை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல ஆந்திராவில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ள சர்கார் திரைப்படம் ஆந்திர ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போக திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தெலுங்கின் பவர் ஸ்டார் என்றழைக்கப்படும் பவன் கல்யாணுடன் நடிகர் விஜயை ஒப்பிட்டு புகழ்ந்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement