மீண்டும் அரசு இலவச பொருளை கிண்டல் செய்த சர்கார் படகுழு..!விஜய், முருகதாஸுக்கு தைரியம் தான் போங்கா..!

0
1120
- Advertisement -

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்குமாறு அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வந்தனர்.இதையடுத்து சில காட்சிகளும் நீக்கபட்டது.

-விளம்பரம்-

இந்த படத்தில் அரசு வழங்கிய விலையில்லா பொருட்களை தீயிட்டு எரிப்பது போல சில காட்சிகள் அமைக்கப்பட்டது. அந்த காட்சிகள் அதிமுக அரசினை கொச்சைபடுத்தும் விதமாக இருக்கிறது என்று அதிமுகவினர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

- Advertisement -

எனவே, அந்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்கியது படக்குழு. பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் சர்கார் திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளை படைத்து வரும் இந்நிலையில் படக்குழுவினர் ஒரு கெட்-டுகெதர் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

sarkarcake

-விளம்பரம்-

இந்த சந்திப்பில் ஏ ஆர் முருகதாஸ்,விஜய், ஏ ஆர் ரஹ்மான், கீர்த்தி சுரேஷ், பாடலாசிரியர் விவேக், வரலக்ஷ்மி உள்ளிட்டோரும் பங்குபெற்றனர். இந்த சந்திப்பில் சர்கார் படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர்.அந்த கேக்கில் சர்கார் படத்தில் சர்ச்சயாக பேசப்பட்ட மிக்ஸி,கிரைண்டர் போன்றவற்றையும் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் மீண்டும் அரசின் இலவச பொருட்களை கிண்டல் செய்துள்ளனர் சர்கார் படகுழுவினர்.

Advertisement