சர்கார் படத்தின் முக்கிய வில்லன் இவர் தான் !

0
196
Sarkar Villian

தளபதி விஜய் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் சர்கார் திரைப்படம், வரும் தீபாவளி அன்று வெளியாக அணைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

தனது முதல்கட்ட டப்பிங் பணியை தளபதி விஜய் தொடங்கிவிட்டதாகவும் அதன் பிறகு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக அமெரிக்கா செல்ல விருப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.

Sarkarஎ.ஆர். முருகதாஸ் இயக்கும் எந்த படம் அரசியல் சார்ந்து சமுதாய பிரச்சனைகளை கையாளும் விதமாக இருக்கும் என்று திரை துறை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் உருவான இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

vijay-sarkarராதா ரவி மற்றும் பழ கருப்பையா, இந்த படத்தில் அரசியல் சார்ந்த எதிரிகளாக வளம் வருவார்கள் என்ற விடயம் இணையத்தில் பரவியது. அதோடு வரலக்ஷ்மி சரத்குமார் அவர்களும் இந்த படத்தின் வில்லன்களில் ஒருவர்.

இவர்களிடையே 7ஆம் அறிவு படத்தில் எ.ஆர். முருகதாஸ் அவர்களால் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஜானி ட்ரை நுங்யின்’ என்பவர் மீண்டும் விஜய்க்கு எதிராக முக்கிய வில்லனாக சர்கார் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

johny tri nguyanஇரும்புத்திரை படத்திலும் இவர் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது காட்சிகளும் அமெரிக்காவில் தான் காட்சியாகப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.