இளைஞர் படையுடன் தளபதி .! “Sun Pictures” வெளியிட்ட புதிய போஸ்டர்.!

0
338
Sarkar

விஜய் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் தயாராகி வரும் ‘சர்கார்’ படத்தின் அப்டேட்டை நீண்ட நாட்களாக வெளியிடாமல் இருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். கடந்த ஜூன் 22 ஆம் தேதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்ட பிறகு பின்பு எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி ‘சர்கார்’ படத்தின் இசை வெளியிட்டு தேதியை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். மேலும், இதையடுத்து விஜய் ரசிகர்களுக்கு அடுத்து ஒரு சிறப்பான அப்டேட்டை அளித்திருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

அதுஎன்னவெனில் தொடர்ந்து 5 நாட்களுக்கு ‘சர்கார்’ படத்தின் மேக்கிங் புகைப்படங்கள் வெளியிடப்போவதாகவும். தினமும் ஒரு புகைப்படம் என்று தொடர்ந்து 5 நாட்களுக்கு ஒவ்வொரு புகைப்படமாக வெளியிடப்போவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.

இதுவரை ‘சர்கார்’ படத்தின் நான்கு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியான நிலையில் இன்று (ஆகஸ்ட் 30) ‘சர்கார்’ படத்தின் கடைசி மற்றும் 5வது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.