இணையத்தில் லீக்கான சர்கார் பாடல்..! சரித்திரம் படைக்க போரிடுவோம்..! செம மாஸ்

0
288
Sarkar

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் “சர்கார்” படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டது. இந்த படத்தின் பாடல்களை இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தெறிக்கவிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் முக்கியமான பாடல் ஒன்றை சென்னையில் படமாக்கினர்.

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகளின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகின. இந்நிலையில் “சர்கார்” படத்தின் பாடல் ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலை உலகத்தில் தளபதி நாங்கள் சரித்திரம் அமைக்க போரிடுவோமே என்று ஆரம்பிக்கும் இந்த பாடல் தான் இந்த படத்தின் ஒரு முக்கியமான பாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் அணைத்து பாடல்களையும் மெர்சல் படத்தில் “ஆளப்போரான் தமிழன்” பாடலை எழுதிய விவேக் தான் எழுதி இருந்தார்.

ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாடலாசிரியர் விவேக் “ஆளப்போரான் தமிழன்” பாடலை விட சர்கார் படத்தில் ஒரு சூப்பர் பாடல் இருக்கிறது என்று கூறியிருந்தார். ஒரு வேலை அது இந்த பாடலாக தான் இருக்கோமோ என்று ஒரு எண்ணமும் நமக்கு எழுகிறது.