70 நிமிடத்தில் ஹிமாலைய சாதனை..! சர்கார் ஒருவிரல் புரட்சி..! Sun Pictures வெளியிட்ட சாதனை

0
395
Sarkar

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள “சர்கார் ” படத்தின் சிங்கள் டிராக் பாடல் கடந்த 24 ஆம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இருந்து “சிம்ட்டாங்காரன்” என்ற ஒரு பாடலை மட்டும் வெளியிட்ட்டது சன் குழுமும்.

இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 30) மாலை 5.30 மணிக்கு “ஒரு விரல் புரட்சியே” என்ற இரண்டாம் பாடலை மாலை 5.30 மணிக்கு sun nxt app லும், மாலை 6 மணிக்கு சமூக ஊடகத்திலும் இந்த பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகி இருந்த நிலையில் ,இந்த பாடல் வெளியான 70 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்ட்டுள்ளது.

அதே போல தற்போது வரை யூடுயூபில் இந்த பாடல் கிட்டத்தட்ட 3 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. “சிம்டாங்காரன் ” பாடல் வெளியான 1 மில்லியன் பார்வையாளர்களை பெற 4 மணி நேரத்தை எடுத்துக்கொண்டது.

அதே போல ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த “சிம்டாங்காரன் ” பாடல் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவே அமைந்தது. ஆனால், “ஒரு விரல் புரட்சியே” பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இருப்பினும் “சிம்டாங்காரன் ” பாடல் வெளியான 4.5 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்கள் பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.