ஆடியோ லான்ச்..! டப்பிங், வில்லன்.! விஜய் CEO.! சர்கார் கதை இதுதான்.! ரசிகர்களுக்கு மாஸ் தகவல்..!

0
394
Sarkar

இளையதளபதி விஜய் நடித்துள்ள “சர்கார் ” சர்கார் படத்திற்காக தான் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகளே முடிவடையாத நிலையில் இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் துவங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

sarkar

இன்று (ஜூலை23) நடிகர் விஜய் இந்த படத்தின் டப்பிங் வேலைகளை துவங்கியுள்ளார். வரும் செப்டம்பரில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவை வெகு விமர்சியாக நடத்த உள்ளனராம்.அதில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் லைவ் பேர்பார்மன்ஸ் ஒன்றை கொடுக்க போகிறாராம்.

இளையதளபதி விஜய்,அவரது படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார். ஆனால், இதுவரை இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் இதுவரை பாடியது இல்லை. தற்போது “சர்கார்” படத்தில் நடிகர் விஜய் ஒரு பாடலை பாடியுள்ளதாக ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால்,அந்த தகவல் இன்னும் ஊர்ஜிதமாகவில்லை.

vijay

இந்த படத்தில் முக்கிய வில்லனாக “7 ஆம் அறிவு “படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் Johnny Trí Nguyễn நடித்துள்ளார் என்று ஏற்கனவே நமது பக்கத்தில் குறிப்பிட்டிருந்தும். தற்போது அந்த தகவல் ஊர்ஜிதமாகியுள்ளது. இந்த மாத இறுதியில்’சர்கார் ‘ படக்குழு அமெரிக்கா செல்லவுள்ளது அதில் நடிகர் Johnny Trí Nguyễn -ன் காட்சிகள் படமாக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Jhonny

மேலும், இந்த படத்தில் நடிகர்விஜய் ஒரு NRI கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.இந்த கதாபாத்திரத்தம் கூகுல் நிறுவன தலைமை அதிகாரி சுந்தர் பிச்சையின் கதாபாத்திரத்தை தழுவியதாக இருக்கும் என்ற சில தகவலும் கிடைத்துள்ளது. மேலும், இந்த படத்தில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை விஜய் எதிர்த்து குரல் கொடுக்கிறார் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட இந்த படத்தில் நடிகர் விஜய் அரசியல்வாதிகளையும், கார்ப்ரேட் நிறுவனங்களையும் எதிர்த்து போராடும் கதைக்களமாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.