சர்க்கார் படத்தில் சூர்யா பட வில்லனா..? ஷாக்கான ரசிகர்கள்.! யார் தெரியுமா..? புகைப்படம் இதோ

0
638

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தில் நடிக்கும் பிரபலங்கள் யார் என்ற தகவல்கள் அடிக்கடி வெளியாகி வந்த வண்ணம் இருக்கிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபலங்களின் பெயர்கள் வெளியான நிலையில்,தற்போது இந்த படத்தில் மெயின் வில்லனாக Johnny Trí Nguyễn நடிக்கிறார் என்று தகவல்கள் வைரலாக பரவி வருகிறது.

sarkar

- Advertisement -

Johnny Trí Nguyễn வேறு யாரும் இல்லை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த “7ஆம் அறிவு” படத்தில் வில்லனாக நடித்த டாங் லி தான். ஹாலிவுட் படத்தில் நடித்து வந்த இவரை தமிழ் சினிமாவில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தான் அறிமுகம் செய்தார்.

மேலும், நடிகர் அதர்வா நடித்த “இரும்பு குதிரை” படத்திலும் வில்லனாக நடித்தார். இந்நிலையில் இவர் “சர்கார் ” படத்திலும் வில்லனாக நடித்துள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. சமீபத்தில் நடிகர் Johnny Trí Nguyễn-யின் விக்கிபீடியா பக்கத்தில் 2018 ஆம் ஆண்டு “சர்கார் ” நடித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

Jhonny

Johnny Trí Nguyễn இந்த படத்தில் நடிக்கிறார் என்று அவரது விக்கிபீடியா பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த செய்தி சில மணி நேரத்திற்கு முன்னாள் நீக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்படி பதிவிட்டதற்கான காரணம் ஏன் என்பது தெரியவில்லை. இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே இதற்கான விடை தெரியும்.

Advertisement