சர்கார் படத்தில் வில்லன் ‘டாங்லீ’ இல்லை..! வேறு யார்..! படக்குழு கொடுத்த அதிர்ச்சி தகவல்.!

0
402

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தில் நடிக்கும் பிரபலங்கள் யார் என்ற தகவல்கள் அடிக்கடி வெளியாகி வந்த வண்ணம் இருக்கிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபலங்களின் பெயர்கள் வெளியான நிலையில்,தற்போது இந்த படத்தில் மெயின் வில்லனாக Johnny Trí Nguyễn நடிக்கிறார் என்று தகவல்கள் வைரலாக பரவி வந்தது.

sarkar

Johnny Trí Nguyễn வேறு யாரும் இல்லை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த “7ஆம் அறிவு” படத்தில் வில்லனாக நடித்த டாங் லி தான். ஹாலிவுட் படத்தில் நடித்து வந்த இவரை தமிழ் சினிமாவில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தான் அறிமுகம் செய்தார்.

மேலும், இவர் நடிகர் அதர்வா நடித்த “இரும்பு குதிரை” படத்திலும் வில்லனாக நடித்தார். இந்நிலையில் இவர் “சர்கார் ” படத்திலும் வில்லனாக நடித்துள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வந்த நிலையில்,தற்போது நடிகர் Johnny Trí Nguyễn இந்த படத்தில் நடிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Jhonny

சமீபத்தில் இது குறித்து ‘சர்கார் ‘ படத்தை தயாரித்துள்ள சன் பிக்ச்சர்ஸ் சார்பில் தெரிவிக்கையில், நடிகர் Johnny Trí Nguyễn இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது. இதனால் இந்த படத்தில் நடிக்கும் வில்லன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் மீண்டும் எழுந்துள்ளது.