சர்கார் பட கதை என்னுடையது..அதை முருகதாஸ் திருடிவிட்டார்..? சர்க்காருக்கு வந்த சோதனை.!

0
268
sarkar

விஜய் படங்கள் என்றாலே பிரச்சனை இல்லாமல் வெளியாகாமல் இருந்தது இல்லை. விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘மெர்சல்’ படத்திற்கு கூட ஏகப்பட்ட அரசியல் ரீதியான பிரச்சனைகள் வந்தது. இருப்பினும் அது படத்திற்கு ஒரு இலவச ப்ரோமோஷனாக அமைந்திருந்தது.

sarkar

தற்போது விஜய் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்கார்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் 90 சதவீதம் முடிந்த நிலையில். கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா படு ஜோராக நடைபெற்றது. படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது புதிய பிரச்சனை ஒன்றை சந்தித்துள்ளது.

சமீபத்தில் உதவி இயக்குனர் வருண் என்பவர் சர்க்கார் படத்தின் கதை என்னுடையது என்று எழுத்தாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், செங்கோல்’ என்று பெயரில் ஒரு கதையை ஏற்கனவே எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும். அந்த கதையை திருடித்தான் ஏ ஆர் முருகதாஸ் சர்கார் படத்தை உருவாக்கி வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

sarkar

வருண் அளித்த புகாரின் பெயரில் எழுத்தாளர் சங்கம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறதும் ஏற்கனவே இந்த படத்திற்கு ‘சர்கார் ‘ என்று இந்தியில் தலைப்பு வைத்திருப்பதை பல்வேறு தரப்பினரையும் கண்டித்து வந்தனர். பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் என்பவர் இந்தியில் தலைப்பை வைத்துள்ளதற்காக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸை மிகவும் காட்டமான திட்டி தீர்த்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.