சர்கார் படத்தின் புக்கிங் இன்று மாலை முதலே தொடக்கம்..!பிரபல திரையரங்கம் சர்ப்ரைஸ்..!

0
352
Rohinisilver

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு திட்டமிட்டபடி வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.

Rohinitheater

சர்கார் படத்தின் கதை திருட்டு விவாகரத்தில் துணை இயக்குனர் வருண் என்பவர் தொடர்ந்த வழக்கில் சர்கார் படகுழுவினரிடம் சமரசம் ஏற்பட்டு இறுதியில் ஏ ஆர் முருகதாஸும் கதை கரு மட்டும் வருணுடையது என்று ஒப்புக்கொண்டார்.

இதனால் சர்கார் படம் சுமுகமாக வெளியாவது உறுதியானதை அடுத்து சர்கார் படத்தின் புக்கிங் நாளை(அக்டோபர் 2) முதல் துவங்கும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்திருந்தது.

திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் சர்கார் படத்திற்காக திரையரங்குகளையும், புக்கிங் வேலைகளையும் மும்மரபடுத்தியுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல ரோகினி திரையரங்கம் இன்று மாலை 6 மணி முதல் துவங்கும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

ஆனால், இது வெறும் கவுண்டர் புக்கிங் மட்டுமே என்று ரோஹிணி திரையரங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது. எனேவ, இன்று மாலை 6 மணிக்கு ரோகிணி திரையரங்கம் சென்றால் சர்க்காரின் டிக்கட் கிடைக்கும் என்று விஜய் ரசிகர்கள் ரோகிணி திரையரங்கிற்கு படையெடுத்துள்ளனர்.