அரபிக் குத்து பாடலுக்கு வடிவேலு குத்து போட்ட சார்பட்ட பட நடிகை – வைரலாகும் வீடியோ.

0
357
- Advertisement -

தற்போது உலகம் முழுவதும் விஜய்யின் அரபிக்குத்து பாடல் தான் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

-விளம்பரம்-

இந்த நிலையில் இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். மேலும், இந்த பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதோடு உலகம் முழுவதும் தற்போது விஜயின் அரபி குத்து பாடல் தான் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ஒரே வாரத்தில் பாடல் வெளியாகி 70 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து 100 மில்லியன் பார்வையாளர்களை நெருங்க இருக்கிறது.

- Advertisement -

அரபி குத்துப்பாடலுக்கு நடனமாடிய துஷாரா:

அதுமட்டும் இல்லாமல் அரபி குத்துப்பாடல் வெளியானதிலிருந்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். கோலிவுட், டோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் என பட்டி தொட்டி எங்கும் அரபி குத்துபாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது சர்பட்டா படத்தின் கதாநாயகி அரபி குத்து பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

சர்பட்டா பரம்பரை படத்தில் நடித்த நடிகர்கள்:

தற்போது அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘சர்பட்டா பரம்பரை’ படத்தில் ‘மாரியம்மா’வாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை துஷாரா விஜயன். இந்த படத்தில் பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்து இருந்தார்கள். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது.

-விளம்பரம்-

சர்பட்டா பரம்பரை படம் பற்றிய தகவல்:

இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. இந்த படத்தின் மூலம் ஆர்யாவின் திரைப்பயணம் மாறியது என்று சொல்லலாம். மேலும், இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை துஷாரா விஜயன் தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் பரிச்சமில்லாத முகம் தான். ஆனால், இந்த படத்தில் இவரது நடிப்பு பாரட்டப்பட்டுகளை பெற்றது. இவர் தமிழில் ‘போதை ஏறி புத்தி மாறி’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

துஷாரா விஜயன் நடிக்கும் படங்கள்:

அதோடு துஷாரா விஜயன் 2016 இல் ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் ஒரு சிறந்த நடனக் கலைஞரும் ஆவார். பின் சர்பட்டா பரம்பரை படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதனை தொடர்ந்து தற்போது இவர் வசந்தபாலன் இயக்கத்தில் ‘அநீதி’ என்ற படத்திலும், பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த இரு படங்களும் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Advertisement