பாலச்சந்தரின் சீரியலில் அறிமுகம், சேவை அறக்கட்டளை, அழகிப் பட்டம் – சார்பட்டாவில் வந்த இந்த நடிகை யார் தெரியுமா ?

0
417
priyadharshini
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் பிரியதர்ஷினி. இவர் சென்னையில் பிறந்தவர். சென்னை கலை மற்றும் கைவினை கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கிறார். விளம்பர படங்களில் உதவியாளராக, விளம்பரங்களுக்காக மாடலாகவும் ஆரம்பத்தில் நடித்திருந்தார். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது திரைப்பட நாடக குழுக்களில் ஆங்கில நாடகங்கள் பிரான்சிஸ், மாக்ஸ் முல்லர் போன்ற பல நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். அந்த சமயத்தில் இவருக்கு இயக்குனர் கே பாலச்சந்தர் மேடை நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

இவருக்கு சிறு வயதிலிருந்து சினிமாவில் நடிக்கணும் என்ற ஆசை இருந்தது. இதனால் இவர் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய மின் பிம்பங்கள் சீரியலில் நடித்து இருக்கிறார். அதற்குப்பின் ஆஸ்திரேலியாவில் 14 வருடம் செட்டிலாகிவிட்டார். பின் நடிப்பதற்கான சூழல் வந்தவுடன் இந்தியா வந்து விட்டார். மேலும், இவர் 2015 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரெமோ, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களில் நடித்தார். இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது விஜய் சேதுபதி நடிப்பில் வந்து சூப்பர் ஹிட் கொடுத்த கவன் படத்தில் தான். இந்த படத்தில் இவர் வில்லியாக நடித்து இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

- Advertisement -

பிரியதர்ஷினி நடித்த படங்கள்:

அதனை தொடர்ந்து இவர் நேர்கொண்ட பார்வை, சார்பட்டா பரம்பரை போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். தற்போதும் இவர் சில நடித்து இருக்கிறார். கூடிய விரைவில் அந்த படங்கள் வெளியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர் 2018ஆம் ஆண்டு புது டெல்லியில் அழகிகளுக்கான நடந்த Dazzle Mrs India World Classic என்ற போட்டியில் பட்டத்தை வென்றார். மேலும், இவர் நடிகை மட்டுமில்லாமல் பயிற்சி பெற்ற நடன கலைஞர் மற்றும் சமூக ஆர்வலரும் ஆவார். இவர் சரஸ்வதி கல்வி மற்றும் கலாச்சார தொண்டு நிறுவனத்தின் செயலராகவும் பணிபுரிந்து வருகிறார்.

பிரியதர்ஷினி நடத்தும் சேவை நிறுவனம்:

இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்களை முன்னேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் ஆண்டுதோறும் மே மாதம் மயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற கபாலீஸ்வரர் ஆலயத்தில் வசந்த உற்சவ விழாவில் கலாச்சார நிகழ்வு நடனம் மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பிரியதர்ஷினி பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார். அதில் அவர் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். எனக்கு சின்ன வயதில் இருந்து நடிக்கணும் என்ற ஆசை இருந்தது. அதனால் கிடைத்த வாய்ப்புகளை தவற விடாமல் நடித்தேன். என்னை மக்கள் மத்தியில் அறிமுகம் படுத்தியது கவண் படம்சூழலில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குற படங்கள் அதிகம் வந்து கொண்டு இருக்கு.

-விளம்பரம்-

பிரியதர்ஷினி அளித்த பேட்டி:

அதனால் இன்னும் விதம் விதமான கேரக்டர்கள், ஸ்ட்ராங்கான ரோல் நடிக்கணும். அது மூலமாக என்னோட திறமைய வெளிகொண்டு வரணும் என்பது தான் என் ஆசை. சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் சோசியல் சர்வீஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். முடியாதவங்களுக்கு உதவுவதற்காக சமூக சேவை அறக்கட்டளை ஒன்றில் செயலாளராக இருந்து வேலை செய்கிறேன். அதோடு நிறைய அஜித் சார் பத்தி கேட்டாங்க. நான் அஜித் சார் உடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து இருக்கேன். இந்த படத்தில் என்னோட சீன் பாத்தீங்கன்னா, அஜீத் சார் கூட எந்த காம்பினேசன் சீனும் இருக்காது. இதை நினைத்து ஆரம்பத்தில் ரொம்ப வருத்தப்பட்டேன்.

அஜித் உடன் நடித்த அனுபவம்:

ஆனால், கடைசி நாள் ஷூட் அப்ப அவரே நேரில் வந்தாரு. அப்ப அவர் கூட கொஞ்ச நேரம் பேசுற வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு ஏன் இவ்ளோ ரசிகர்கள் இருக்காங்கன்னு அப்பதான் புரிஞ்சுது. நிஜமாவே அஜித் சார் மாஸ் ஹீரோதாங்க. அதே மாதிரி நான் சார்பேட்டா பரம்பரை படம் இந்த அளவிற்கு வெற்றி பெறும் என்று நினைக்கவே இல்லை. ஏன்னா, இந்த படம் எடுக்கப் போகும் போது பல பிரச்சனைகள் இருந்தது. அதேபோல் மீடியாவில் அந்தப் படத்தைப் பற்றிய பேச்சே இல்லை. அதனால் அந்த படம் பெரிய அளவில் வெற்றி கிடைக்காது என்றுதான் நான் நினைத்தேன்.

பிரியதர்ஷினி நடிப்பில் உருவாகி உள்ள படம்:

பின் இந்த படத்தை ஒடிடிக்கு தயார் செய்த பிறகு தான் படத்தை தூக்கி விட்டது என்று சொல்லலாம். இந்தப் படத்தில் நானும் ஜானும் நிறைய காட்சிகளில் அதாவது படத்தில் நிறைய க்யூட் சீன்களில் நடித்திருந்தோம். ஆனால், அதை எடுத்து விட்டார்கள். காரணம் படத்தின் நீளத்தை வைத்து எடுத்து விட்டார்கள் என்று கூறி இருந்தார். இறுதியாக இவர் பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல், சமுத்திரகனியின் சங்கத்தலைவன் போன்ற படங்களில் நடித்து இருந்தார்.

Advertisement