இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் ஆயுத எழுத்து. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. மேலும், இந்த படத்தில் சூர்யா, சித்தார்த், மாதவன், த்ரிஷா, மீரா ஜாஸ்மின், இஷா தியோல், பாரதிராஜா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் மூன்று இளைஞர்களாக மாதவன், சூர்யா, சித்தார்த் நடித்திருக்கிறார்கள். மாதவன் அடிதடி குணம் கொண்டவன். கல்லூரி மாணவனாக வரும் சூர்யா அரசியலில் நடக்கும் அநீதிகளை மக்களுக்கு விளக்கி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். இதனை அரசியல் வாதிகள் ஏத்திகிறார்கள்.
பின் பாலம் ஒன்றில் மூவரும் சந்திக்கிறார்கள். அப்போது சூர்யாவை, மாதவன் சுடுகிறார். இதை சித்தார்த் பார்க்கிறார். பின் சூர்யா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார். பின் மூவரும் எவ்வாறு இந்த சூழ்நிலைக்கு ஆளாகிவிடுகிறார்கள் என்பதே படத்தின் கதை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும், இந்த படத்தில் காலேஜ் ஸ்டுடென்ட் ஆக வரும் சபீர் யார் என்று தெரியுதா? அவரை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.
சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த நடிகர்கள்:
அவர் வேற யாரும் இல்லைங்க, சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸாக வருபவர். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த படம் சார்பட்டா பரம்பரை. இந்த திரைப்படம் கடந்த ஆண்டு அமேசான் ப்ரைமில் வெளியானது. இந்த படத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா விஜயன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.
சார்பட்டா பரம்பரை படம்:
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. மேலும், சார்பட்டா பரம்பரை படத்தில் 1975ன் பிற்பகுதியில் நடக்கிறது கதை. பிரிட்டிஷார் அறிமுகம் செய்த குத்து சண்டை விளையாட்டை ஒரே குழுவாக குத்துச் சண்டையில் ஈடுபட்டு வந்தவர்கள். பின்னர் குத்துச் பரம்பரை, இடியப்ப நாயக்கர் பரம்பரை, எல்லப்ப செட்டியார் பரம்பரை, கரிய பாபுபாய் பரம்பரை என்று பல்வேறு குழுக்களாக பிரிந்து விடுகிறது.
சார்பட்டா பரம்பரை படத்தில் டான்ஸிங் ரோஸ்:
ஆனால், இந்த குத்துச் சண்டையில் சார்பட்டா பரம்பரையைச் சார்ந்தவர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். ஒரு கட்டத்தில் சார்பட்டா பரம்பரைக்கு இடியப்ப நாயக்கர் பரம்பரைக்கும் மோதல் ஏற்படுகிறது. பின்னர் இடியப்ப பரம்பரை? சார்பட்டா பரம்பரை? எந்த பரம்பரை ஜெயித்தது. ஆர்யா யார் பக்கம் நின்றார்? என்பது தான் கதை. இந்த படத்தில் எத்தனையோ சண்டை காட்சி வந்தாலும் டான்ஸிங் ரோஸ் தான் பலரின் பேவரைட்டாக மாறி இருக்கிறது. டான்சிங் ரோஸாக வருபவர் நடிகர் ஷபீர். கலக்கலான உடல்மொழியுடன் ரிங்கில் இருக்கும்போது ஆர்யாவையும் பின்னுக்குத் தள்ளி மொத்தமாக ஸ்கோர் செய்கிறார் ஷபீர்.
ஆயுத எழுத்து படத்தில் காலேஜ் ஸ்டுடண்ட்:
அவருடனான அந்த பாக்ஸிங் மேட்ச் மிரட்டல். அட, யாருப்பா என்று பார்த்தால் ஷபீர் கல்லரக்கல். இவர் ஒரு நாடக கலைஞர். மேலும், ’பார்க்கவுர்’ (Parkour) என்று அழைக்கப்படும் சண்டைக்கலையில் தேர்ந்தவர். இதனால் தான் அவரை டேன்ஸிங் ரோஸ் ஆக நடிப்பதற்கு உதவியிருக்கிறது. ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்காக முறையாக பாக்ஸிங் பயிற்சி எடுத்திருக்கிறார் ஷபீர். அதுமட்டும் இல்லாமல் இவர் ஆயுத எழுத்து படத்தில் காலேஜ் ஸ்டுடண்க்காக நடித்து இருக்கிறார். தற்போது இவரின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.