‘சூர்யா பிறந்த நாளுக்கு கூட வாழ்த்து சொல்லல ஜெய் பீம்னு பேர கேட்டதும் சின்ராசு கிளம்பிட்டான் சாதி வெறியன் ரஞ்சித்’ என்று திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

0
61879
jaibeem
- Advertisement -

சூர்யாவின் ஜெய்பீம் படத்தின் போஸ்டருக்கு வாழ்த்து தெரிவித்து விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. இறுதியாக இவரது நடிப்பில் அமேசான் பிரைம் Ott தளத்தில் வெளியான ‘சூரரை போற்று’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து இருந்தது. இந்த படம் திரையரங்கில் வெளியாகி இருந்தால் நிச்சயம் பிளாக் பஸ்டர் வசூலை பெற்று இருக்கும் என்பது தான் உண்மை.

சூரரை போற்று படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, வெற்றிமாறன், பாண்டிராஜ் போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் வாடி வாசல் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் படத்தின் போஸ்டரும் வெளியானது.

இதையும் பாருங்க : வீட்டில் நைட்டியில் பலாப்பழம் உரித்துகொண்டு இருக்கும் அபிராமி – அட, கொடுமையே எப்படி இருந்த நடிகை.

- Advertisement -

அதன் தொடர்ச்சியாக அந்தப் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரும் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது.  அந்த படத்திற்கு எதற்கும் துணிந்தவன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து சூர்யாவின் சொந்த தயாரிப்பில் கூட்டத்தில் ஒருவன் படத்தின் இயக்குநர் ஞானவேலின் இயக்கத்தில் படத்தில் நடித்துவருகிறார். 

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு ‘ஜெய்பீம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யா ஒரு வழக்கறிஞ்சராக நடிக்க இருக்கிறார். மேலும், பழக்குடி அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதிமன்றத்தில் போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கிறார் என்பதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. 

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு இயக்குனர் ரஞ்சித் வாழ்த்து தெரிவித்து இருந்தார். ஆனால், நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை பற்றி எதுவும் சொல்லாத ரஞ்சித் ஜெய் பீம் படத்திற்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்கிறார் அவர் ஒரு ஜாதி வெறியர் என்று சிலர் விமர்சனம் செய்தனர்.

ஆனால், உண்மையில் ‘ஜெய்பீம்’ என்ற இந்த டைட்டில் ரஞ்சித் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒரு டைட்டில் தான் என்றும் அவர் தான் இந்த படத்திற்கு அந்த டைட்டிலை கொடுத்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனை உறுதி செய்யும் விதமாக ஜெய்பீம் படத்தை தயாரிக்கும் சூர்யாவின் 2d தயாரிப்பு நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரான ராஜசேகர் பாண்டியன், ஜெய் பீம் டைட்டிலை கொடுத்ததற்கு ப ரஞ்சித்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement