படத்துலயே அசந்துடீங்களே, உண்மையான டேன்ஸிங் ரோஸின் இந்த வீடியோவை பாருங்க மெர்சல் ஆகிடுவீங்க

0
151944
dancing
- Advertisement -

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் இன்று அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் டான்சிங் ரோஸாக வரும் ஷபீர், கலக்கலான உடல்மொழியுடன் ரிங்கில் இருக்கும்போது ஆர்யாவையும் பின்னுக்குத் தள்ளி மொத்தமாக ஸ்கோர் செய்கிறார்.இவர் ஒரு நாடக கலைஞர். மேலும், ’பார்க்கவுர்’ (Parkour) என்று அழைக்கப்படும் சண்டைக்கலையில் தேர்ந்தவர் என்பதால் அது அவரை டேன்ஸிங் ரோஸ் ஆக நடிப்பதற்கு உதவியிருக்கிறது.

இதையும் பாருங்க : இது வரை ராதா மகளை நீச்சல் உடையில் பார்த்துளீர்களா ? தற்போது வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்காக முறையாக பாக்ஸிங் பயிற்சி எடுத்திருக்கிறார் ஷபீர். இந்த படத்தில் அவரை பார்த்த பலரும் இவர் புதுமுகம் என்று தான் நினைத்து இருப்பீர்கள். 2014ஆம் ஆண்டு லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘நெருங்கி வா முத்தமிடாதே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகியிருக்கிறார் ஷபீர்.

ஜெயம் ரவி நடித்த ‘அடங்க மறு’ படத்தில் கலெக்டரின் மகனாக நடித்து இருப்பார். அதே போல ரஜினி நடித்த பேட்ட படத்திலும் நடித்து இருந்தார். சார்பட்டா பரம்பரையில் இவர் செய்த பாக்சிங் மேனரிஸம் எல்லாம் உண்மையில் பாக்சிங் உலகில் 90களில் கலக்கிய Naseem Hamed என்ற குத்து சண்டை வீரரின் மேனரிஸம் தான். இவரின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement