முதலில் ‘மாஞ்சா கண்ணன்’ ரோலுக்கு என்ன தான் சொன்னாங்க – சார்பட்டா பட முக்கிய நடிகர் சொன்ன ரகசியம். (ஆனா, இவரு ரோல் செமயா மாட்டிக்கிச்சி)

0
5993
- Advertisement -

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக டான்சிங் ரோசாக வந்த நடிகர் ஷபீர், டாடியாக வந்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்து உள்ளது. அதே போல இந்த படத்தில் மாஞ்சா கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மாறன்.

- Advertisement -

இவருக்கு இது தான் கடைசி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் கில்லி படத்தின் மூலம் அறிமுகமான மாறன் அதன் பின்னர் டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன் என்று பல்வேரு படங்களில் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் கொரோனா தொற்று காரணமாக காலமானார்.

Image

சார்பட்டா படத்தில் இவரது காட்சியை பார்க்கும் போது பலரும் இவருக்காக இறக்கப்பட்டு இருப்பார்கள். இப்படி ஒரு நிலையில் சார்பட்டா படத்தில் இவரது கதாபாத்திரத்தில் தான் தான் நடிக்க ஆசைப்பட்டதாக கூறியுள்ளார் ஜான்விஜய். இதுகுறித்து பேசியுள்ள அவர், ஆரம்பத்துல எம்.ஜி.ஆரோட ரசிகரான மஞ்சா கண்ணன்னு ஒரு கேரக்டருக்குத்தான் என்னை கேட்டாங்க. அப்புறம் ரஞ்சித் என்னைக் கூப்பிட்டு, ‘இன்னொரு ரோல் ஒண்ணு இருக்குது. அதை நீங்க பண்ணாதான் கரெக்ட்டா இருக்கும்னு எனக்கு டேடி கேரக்டரா குடுத்தார் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement