தன் சிரிப்பை கேலி செய்யும் விஜய் டிவி பிரபலங்கள் – சசி குமார் சொன்ன பதிலை பாருங்க.

0
583
sasikumar
- Advertisement -

சசிகுமார் என்றாலே அவருடைய மீசை, பார்க்கும் பார்வை மற்றும் பேட்சுதான் நியாபகம் வரும். அதையும் தாண்டி முதலில் நினைவுக்கு வருவது அவரது சிரிப்பு தான். சுப்பிரமணிய புரம் என்ற திரைப்படத்தில் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இப்படமானது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை தந்திருந்தது. அதன் பிறகு நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், தாரை தப்பட்டை போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் சசிகுமார். இவர் நடித்திருந்த நாடோடிகள் திரைப்படம் மெகா ஹிட் அடித்து 100கோடி வரை வசூல் செய்தி சாதனை படைத்து.

-விளம்பரம்-

மேலும் இவர் படங்களில் மட்டுமே நடிக்காமல் பசங்க, சுபராமணிய புரம், ஈசன் போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். இப்படி தமிழ் நாட்டில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகிய சசிகுமாரை பல சின்னத்திரை மிமிக்ரி கலைஞர்கள் அவரை போல பேசி கலாய்த்து வருவதுண்டு. இந்நிலையில் தான் மா.கா.பா மற்றும் டிஎஸ்கே போன்ற காமெடி கலைஞர்கள் கலந்து கொன்றிருந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போது நடிகர் சசிகுமாரை போல தொகுப்பாளராக பிரியங்கா சிரித்து காட்டியிருந்தார்.

- Advertisement -

மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பல முறை தொகுப்பாளரான பிரியங்கா சசிகுமாரை போல சிவரித்து காட்டி கலாய்த்துள்ளார். இந்நிலையில் பிரபல செய்தி சேனலுக்கு இயக்குனர் சசிகுமார் கொடுத்த பேட்டியின் போது செய்தியாளர் நீங்கள் சிரிப்பதை போல பல மிமிக்ரி கலைஞர்கள் சிரித்து கேட்டிருக்கிறறோம் அதே போல இப்போது சிரிக்கிறீர்களா என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சசிகுமார் `நாடோடிகள் திரைப்படத்தில் ஒரு கட்சியில் நான் நன்றாக சிரிக்க வேண்டியதிருந்தது.

ஆனால் எனக்கு சிரிப்பே வரவில்லை அதனால் நமோ நாராயணன் என்ற காமெடியன் சிரிப்பதை போல நான் சிரித்திருந்தேன் என்று அது என்னுடைய சிரிப்பே கிடையாது என்றும் கூறினார். மேலும் மிமிக்ரி கலைஞர்களில் சில பேருக்கு என்னுடைய குரல் வரவில்லை என்றதால் இந்த சிரிப்பை சிரித்து வைரலாக்கிவிட்டனர். நானும் சிரிப்புதானே யார் சிரித்தால் என்னவென்று கண்டுகொள்ளவில்லை என்று கூறினார்.

-விளம்பரம்-

தற்போது சசிகுமார் நடித்திருந்த “நான் மிருகமாய் மாற” என்ற திரைப்படமானது இன்று வெளியாகி இருக்கிறது. இதற்கடுத்து ஒரு வார இடைவெளியிலேயே “காரி” என்ற மற்றொரு திரைப்படமும் வெளியாகவுள்ளது. இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை ஹரிப்பிரியா நடித்துள்ளார். கழுகு திரைப்படத்தை இயக்கிய சத்ய சிவா இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் நான் மிருகமாய் மாற என்ற திரைப்படத்தின் “ட்ரைலர்” லேயே அதிக வன்முறை காட்சிகள் உள்ளதாக விமர்சனம் எழுந்த நிலையில் தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார் இயக்குனர் சசிகுமார்

இந்த பேட்டியில் பேசிய சசிகுமார் பாடலே இல்லாத ஒரு படத்தில் தான் நடித்திருப்பதகவும் விரைவில் தான் ஒரு படத்தை இயக்கவிருப்பதாகவும் அதற்கான வேலை தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்று கூறினார். மேலும் ஒரு செய்தியாளர் உங்களை போல மற்றவர்கள் பேசி கிண்டலடிப்பது வருத்தமாக இல்லையா என்று கேட்டதற்கு தான் வருத்தப்படவில்லை என்று கூறினார் சசிகுமார். மேலும் அவர்கள்தான் நான் யாரென்று தெரியாத மற்றவர்களுக்கு என்னை கொண்டு சேர்க்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் என்னை போல பேசுவது டிஎஸ்கே போன்ற சிலபேர் மட்டும்தான் என்னவே நான் நாடோடிகள் படத்தில் சிரித்தது வைரல் ஆகியதால் அதனை போன்று செய்கிறார்கள் என்று கூறினார்.

Advertisement