பல ஆண்டுகள் கழித்து ‘அயோத்தி’ மூலம் கிடைத்த வெற்றி, கேக் வெட்டி இயக்குனருக்கு சசிகுமார் கொடுத்த காஸ்டலி கிப்ட்.

0
308
- Advertisement -

அயோத்தி பட இயக்குனருக்கு நடிகர் சசிகுமார் தங்க செயின் பரிசாக அளித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடித்து வரும் இயக்குனர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வரிசையில் இயக்குனராகி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சசிகுமார். இவர் தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார்.

-விளம்பரம்-

தமிழில் சசிகுமார் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சுப்ரமணியபுரம். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்து இருந்தது. இந்த படத்தின் மூலம் தான் சசிகுமார் இயக்குனராகவும் நடிகராகவும் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் சசிகுமார் ஈசன் என்ற படத்தை இயக்கியிருந்தார். அதனை அடுத்து இவர் இயக்குவதை விட்டு தொடர்ச்சியாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகர் சசிகுமார் நடிப்பில் அயோத்தி படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கியிருக்கிறார். இந்த படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் யஸ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ராணி, புகழ், போஸ் வெங்கட், பாண்டி ரவி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.இந்த படம் கடந்த மார்ச் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளியாகியிருக்கிறது.

சசிகுமார் அளித்த பரிசு:

மேலும், இந்த படம் வெளியாகி மூன்று வாரங்களை கடந்தும் திரையரங்களில் ஓடி இருக்கிறது. மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் குறித்து இந்த படம் பேசி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ரவிந்திரன் ஆகியோருக்கு நடிகர் சசிகுமார் தங்க செயினை பரிசளித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

நீண்ட இடைவெளிக்கு பின் கிடைத்த ஹிட் :

சசி குமார் நடிப்பில் வெளியாகி இருந்த ஒரு சில படங்கள் மட்டுமே எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இறுதியாக இவர் நடித்த நடித்த எம்ஜிஆர் மகன், ராஜவம்சம்நான் மிருகமாய் மாற, காரி போன்ற படங்கள் எல்லாம் பெரும் தோல்வியை தழுவியது. இதனால் ஒரு வெற்றிப்படத்திற்காக சசி குமார் காத்துக்கொண்டு இருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் அயோத்தி திரைப்படத்தின் மூலம் நடிகர் சசிகுமாருக்கு ஒரு ஹிட் கிடைத்து இருக்கிறது.

குற்றப்பரம்பரை :

தற்போது பரமகுரு, நா நா, பகைவனுக்கு அருள்வாய் போன்ற பல படங்களில் சசிகுமார் நடித்து வருகிறார். மேலும், குற்றப்பரம்பரை என்ற நாவலை சசிகுமார் இயக்க இருக்கிறார். பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய நாவல் தான் குற்றப்பரம்பரை. இதில் நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்தின் மகன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இதனை அடுத்து தற்போது

Advertisement