அறுவடை செய்து திருப்பி கொடுத்துவிடுகிறேன் – உதவி செய்த சசி குமார், நெகிழவைத்த விவசாயி.

0
914
sasi
- Advertisement -

கொரோனாவினால் உலகமே அல்லாடி கொண்டு உள்ளது. கொரோனாவின் கோரத்தாண்டவம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனாவால் 56342 பேர் பாதிக்கப்பட்டும், 1886 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். அதிலும் தமிழ்நாட்டில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை இன்னும் சில நாட்களுக்கு நீட்டித்து உள்ளார்கள். காவல்துறை, மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் என பல பேர் தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி வருகிறார்கள்.

-விளம்பரம்-

நாடு முழுவதும் கொரோனாவினால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பல பேர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். ஊரடங்கால் அனைத்து துறைகளும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. அதிலும் விவசாயிகள் அதிக அளவு பாதிக்கப்பட்டு உள்ளன. விவசாய மக்கள் விவசாயம் செய்ய அரசு அனுமதி அளித்தாலும் விளைந்த பொருட்களை வாங்க ஆளில்லாததால் அனைத்தும் வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் மதுரையை சேர்ந்த வாழை விவசாயி ஒருவர் அறுவடை செய்ய வழியில்லாமல் தவித்து வருவதாக வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை கத்துக்குட்டி படத்தின் இயக்குனர் இரா.சரவணன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் யாராவது உதவுங்கள் என்று குறிப்பிடும் இருந்தார். இதை அறிந்த பிரபல நடிகரும், இயக்குனருமான சசிகுமார் அவர்கள் அந்த வாழை விவசாயிக்கு 25 ஆயிரம் ரூபாய் பண உதவி செய்திருக்கிறார்.

இது குறித்து அந்த விவசாயி கூறியது, சசி சார் உதவியா கொடுத்தாலும் அதை கடனாக தான் நான் எடுத்து கொள்கிறேன். அடுத்த சாகுபடியில் நிச்சயம் அவருக்குத் திருப்பிக் கொடுப்பேன்” என்று கூறி உள்ளார் விவசாயி கோபாலகிருஷ்ணன். இவரின் இந்த செயலை பாராட்டி சோசியல் மீடியாவில் பாராட்டி வருகிறார்கள். இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement