திருமணம் ஆகல, சொந்த வீடு,கார் எதுவும் இல்ல – பல படங்களில் நடித்த இவரை நினைவிருக்கா ? அவரின் பரிதாப நிலை.

0
440
sasi
- Advertisement -

தமிழ் சினிமாவில் துணை மற்றும் எதிர்மறை கதாப்பாத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் நடிகர் சசிகுமார் சுப்பிரமணி. இவர் 2001ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் லங்குசாமி இயக்கத்தில் மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா போன்ற பிரபல நட்சத்திரங்கள் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான “ஆனந்தம்” என்ற படத்தில் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாக்கினார். இவர் தன்னுடைய சிறுவயதிலிருந்தே நடிப்பில் ஆவர்வம் கொண்டவராக இருந்து வந்துள்ளார். பாலு மஹிந்திரா போன்ற பல பிரபல இயக்குனர் வீடுகளுக்கு சென்று வாய்ப்புகளை தேடி வந்த இவர் பின்னர் சிறு சிறு வேடங்களில் சின்னத்திரையிலும் , எடிட்டராகவும் பணியாற்றி வந்தார்.

-விளம்பரம்-

பின்னர் ஜேஜே, திருப்பாட்சி, தலைநகர் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்த சசிகுமார் சுப்பிரமணி 2013ல் பாலு மஹேந்திரா மற்றும் சசிகுமார் இயக்கத்தில் வெளியான “தலைமுறைகள்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்திற்கு “தி ஹிந்து” பத்திரிக்கை இப்படத்தினை ” நல்ல படம்” என்று இதில் சிவராமன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சசிகுமார் சுப்பிரமணி அவர்களை “மதிக்கத்தக்க அண்டர்ப்ளே அவரது சொத்து” என்று செய்தி வெளியிட்டிருந்தது ஆனால் சினிமா இவரை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது நிதர்சமான உண்மை.

- Advertisement -

இந்நிலையில் தான் நடிகர் சகிக்குமார் சுப்பிரமணி பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் நடிகை ஷகீலா நீங்கள் சென்னயில் இருக்கிறீர்கள் குறைந்த பட்சம் கார் வைத்திருக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு என்னிடம் காரும் இல்லை சொந்த வீடும் இல்லை ஒரு பைக் மட்டுமே இருக்கிறது. வாழ்வதற்கு சிறிய சிறிய வேலைகளை செய்து வருகிறேன் உதாரணமாக கதை எழுதி கொடுப்பது, நடிப்பு கற்று கொடுப்பது என இருந்து வருகிறேன் என்று கூறினார். இதை கேட்ட ஷகீலா ஆச்சிரியமடைந்து விட்டார்.

நான் தமிழ் மற்றும் மலையாளம் சேர்த்து 50 திரைப்படங்களில் நடித்திருப்பதாகவும் கூறினார். மேலும் கன்னட சினிமாவில் தனக்கு ஒரு திரைப்படத்தில் பெரிய காதபத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தாகவும் ஆனால் தனக்கு கன்னடம் தெரியாத காரத்தினால் அங்கு திரைப்படம் எடுக்கும் போது நான்கு டேக் ஆகிவிட்டால் என்ன செய்வதென்று நினைத்ததால் `நான் படக்குழுவிற்கு தொந்தரவு செய்ய தனக்கு விருப்பமில்லை என்று கூறினார். இதற்கு ஷகீலா நீங்கள் இந்த காலத்தில் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம் மேலும் முன்னர் போல இல்லாமல் இப்போது திரைப்படத்துறை டிஜிட்டல் ஆகிவிட்டது.

-விளம்பரம்-

இப்படியிருக்கும் போது ஏன் நீங்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும் அது மொழி தானே அதனை சுலபமாக கற்றுக்கொள்ளலாம் என்று கூறினார் ஷகீலா. அதற்கு பதிலளித்த நடிகர் சசிகுமார் சுப்பிரமணி தனக்கு தெலுங்கு திரைப்படத்தில் நடிப்பதற்கு அடிப்படை தெலுங்கு மொழி தெரியும். அதே போல ஹிந்தி மொழியும் தெரியும் ஆனால் எனக்கு கன்னடம் முழுவதுமாகவே தெரியாது. மேலும் தன்னால் படக்குழுவிற்கு தயாரிப்பு செலவு அதிகம் ஆவது என்னக்கு விருப்பமில்லை என்று கூறினார்.

இதனையடுத்து உங்களை யாரவது சினிமாத்துறையில் முதுகில் குத்தியிருக்கிறார்களா என்று ஷகீலா கேட்டார். அதற்கு பதிலளித்த சசிகுமார் சுப்பிரமணி தனக்கு அது வாழ்கையிலேயே நிறைய நடந்திருக்கிறது என்று கூறினார். மேலும் தன்னுடைய நீண்டநாள் நம்பனே என்னுடன் இருந்துவிட்டு சசிகுமார் பிரபலமாகிவிட்டால் அதை என்னால் ஜீரணிக்க முடியாது என்று கூறினார். இந்த சம்பவங்களில் மாணிக்க முடியாதது என்னவென்றால் எனக்கு தெரியாமலே என்னை என்னுடைய பணக்கார நண்பன் அடமானம் வைத்து விட்டார் அது எனக்கே அப்போது தெரியாது என்று தன்னுடைய வாழ்ககையில் நடந்த பல சுவாரசியமான நிகழ்வுகளை அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார் நடிகர் சசிகுமார் சுப்பிரமணி.

Advertisement