கேபிஒய் திவாகருக்கு நடிகர் சசிகுமார் கொடுத்திருக்கும் அட்வைஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த அளவிற்கு வித்தியாசமான கான்செப்டில் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் கலக்கப்போவது யாரு.

இந்த நிகழ்ச்சி பல சீசன்களை கடந்து தற்போது கலக்கப்போவது யாரு சீசன் 10 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் நடுவர்களாக மதுரை முத்து, அமுதவாணன், ராமர், புகழ் ஆகியோர் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை நிஷா, வினோத் பாபு தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள். புது போட்டியாளர்களுடன் வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள்.
திவாகர் சொன்னது:
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சசிகுமார் வந்திருந்தார். மேலும், kpyல் போட்டியாளராக இருந்தவர் டாக்டர் திவாகர். இவர் பிசியோதெரபிஸ்ட். இவர் விஜய் டிவி கேரவனில் சசிகுமார் வந்தபோது அவரிடம் திவாகர், மூன்று படத்தில் தனுஷ் நடித்த கிளைமாக்ஸ் காட்சி சீனை நடித்து காண்பித்து இருக்கிறார். அதை பார்த்து சசிகுமாரும் பாராட்டி இருந்தார்.

சசிகுமார் சொன்ன அட்வைஸ்:
பின் திவாகர், நான் டாக்டர் தெரபிஸ்ட் என்று சொன்னார். அதற்கு சசிகுமார், தயவு செய்து மருத்துவம் தொழிலை விட்டு விடாதீர்கள். தெரபிஸ்ட் தொழில் எவ்வளவு முக்கியமானது தெரியுமா? அதை விடாமல் செய்யுங்கள் என்று அட்வைஸ் செய்து அனுப்பி இருக்கிறார். சசிகுமாரின் இந்த செயலைப் பாராட்டி பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram
சசிகுமார் திரைப்பயணம்:
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இயக்குனர், இயக்கத்தில் வெளிவந்த ‘சுப்பிரமணியபுரம்’ படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. முதல் படத்திலிலேயே இவர் இயக்குனராகவும் நடிகராகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகுமார் குறித்த தகவல்:
அதனைத் தொடர்ந்து இவர் சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த ‘ஈசன்’ என்ற படத்தை எடுத்திருந்தார். அதற்குப் பின் இவர் நடிகராக மட்டும் தான் நடித்து வருந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் சசி குமார் நடிப்பில் வெளியாகி இருந்த ‘நந்தன்’ படம் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.






