பணத்துக்காக விளம்பரத்தில் நடிக்கும் நடிகர் மத்தியில் , கழிப்பறை திறக்கப்போன நடிகர்

0
2210
sasi-kumar

நடிகர்கள் என்றால் பணத்தை வாங்கிக்கொண்டு பந்தாவாக காரில் சென்று கையசைத்து… நகைக்கடை, துணிக்கடை என திறந்து வைப்பவர்கள் என்ற எண்ணத்தை உடைத்துள்ளார் நடிகர் சசிகுமார். கொடைக்கானல் ஒரு அரசு பள்ளியில், கழிப்பறையை திறந்து வைத்து மாணவர்களை நெகிழச் செய்துள்ளார் சசிகுமார்.

Actor-sasikumar

தற்போது நாடோடிகள் பார்ட்-2வில் நடித்து வருகிறார். இந்த படத்தை தானே இயக்கி தயாரிக்கிறார் சசி. நாடோடிகள் மற்றும் போராளி ஆகிய படங்களில் நடித்த சமுத்திரகனி இந்த படத்திற்கு மீண்டும் இணைந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொடைக்கானல் அருகில் உள்ள வல்பட்டி என்னும் கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளிக்கு சென்று அங்கு புதிதாக கட்டப்பட்டிருந்த கழிப்பறையை திறந்து வைத்துள்ளார் சசிகுமார். இதுதான் நாட்டிற்கு மிகவும் முக்கியம் இதனை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என மாணவர்களிடையே சுத்தம் பற்றி பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினார் சசிகுமார்.