தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுப்பிரமணியபுரம்’ படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. முதல் படத்திலிலேயே இவர் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து இவர் சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த ‘ஈசன்’ என்ற படத்தை எடுத்திருந்தார். அதற்குப் பிறகு இவர் நடிகராக மட்டும் தான் நடித்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் சசிகுமார் நடித்த நந்தன், டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது.
இந்த படங்கள் சசிகுமாருக்கு ஒரு நல்ல பெயரையும் வாங்கி தந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
மை லார்ட் படம்:
தற்போது சசிகுமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் மை லார்ட். இந்த படத்தை இயக்குனர் ராஜூ முருகன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சைத்ரா அச்சர், குரு சோமசுந்தரம், ஆசா சரத் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் மை லார்ட் படத்தினுடைய சக்சஸ் மீட் நடைபெற்றிருக்கிறது.

சசிகுமார் பேட்டி:
இதில் பட குழுவினர் கலந்து கொண்டு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். அப்போது விழாவில் பேசிய நடிகர் சசிகுமார், நல்ல படம் மக்களை சென்றடைய கொஞ்சம் நேரம் எடுக்கும். முதல் நாள் கலெக்ஷனை பார்த்துவிட்டு எல்லோருக்குமே கொஞ்சம் பயம் வந்தது. இருந்தாலும் நான் தைரியமாக இருந்தேன். காரணம் எல்லோருமே நல்ல படம் என்று சொன்னார்கள். அது கண்டிப்பாக மக்களிடம் இன்னும் சென்று சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அது தற்போது நடந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=Di9xher48N8
படம் பற்றி சொன்னது:
அயோத்தி படத்தில் நான் பார்த்த அனுபவம் தான் எனக்கு இந்த தைரியத்தை கொடுத்தது. அந்த படமும் இரண்டாவது வாரத்தில் தான் கலெக்ஷனை எடுத்தது. அதே மாதிரி இந்த படமும் கண்டிப்பாக எடுக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மேல் இருக்கிறது. இந்த படம் சேர வேண்டிய இடத்திற்கு கண்டிப்பாக போய் சேரும். இந்த படம் பார்த்து விஜய் டிவி ரிலீஸுக்கு அப்புறம் வாங்கியதும் ஓடிடியில் வாங்கியதும் ஒரு பெரிய வெற்றி தான். அதேபோல் சூர்யா சார் படம் பார்த்து இந்த படத்தை பிரசண்ட் பண்ணுகிறோம் என்று சொன்னதற்கு அவருக்கும் அவருடைய டீமுக்கும் என்னுடைய மனப்பூர்வ நன்றி என்று கூறியிருக்கிறார்






