என் நடத்தர குடும்பம் என்னவாகவும் – கண்ணீர் விட்டுள்ள சாத்தான்குளம் காவலர்.

0
3741
sathankulam

சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் இருவரின் மரணத்தால் தமிழகமே கொந்தளித்து போய் உள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் (59), அவரது மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் (31) இருவரும் ஏபிஜே செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்தார்கள். கடந்த 19 ஆம் தேதி ஜெயராஜ் அவர்கள் ஊரடங்கு உத்தரவு அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடை திறந்து வைத்ததால் காவல் துறை அதிகாரிகள் தந்தை,மகன் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து கடுமையாக தாக்கி உள்ளனர். காவல்துறையினர் தாக்கியதில் இருவருக்குமே பலத்த காயம் ஏற்பட்டு அநியாயமாக உயிர் இழந்து உள்ளார்கள். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் காட்டுத் தீயை விட வேகமாக கொழுந்து விட்டு எரிகிறது.

இந்த கொடூர சம்பவத்திற்கு நியாயம் கேட்டு நாடு முழுவதும் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், நடிகர், நடிகைகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த கொலை வழக்கை சிபிசிஐடி (CBCID) விசாரித்து வருகிறது. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சஸ்பெண்டில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் மற்றும் கான்ஸ்டபிள்கள் முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் பாருங்க : ‘எட்டில் ஐந்து எண் கழியும். என்றும், ஐந்தில் எட்டு எண் கழியாது’- இதோட அர்த்தம் இது தானா ?

- Advertisement -

இவர்களிடம் சிபிசிஐடி தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகிறது. மேலும்,கைது செய்யப்பட்ட காவல் அதிகாரிகள் தங்களுடைய குடும்பத்தை பற்றி நினைத்து மிகுந்த மன உளைச்சலிலும், கவலையிலும் இருப்பதாக சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் விசாரணையின் போது மிகுந்த மன அழுத்தத்துடன் இருந்ததாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர். விசாரணையில் இதுபற்றி பாலகிருஷ்ணன் கூறியது,

விசாரணைக்கு கூட்டிட்டு போறவங்களை எப்பவும் எப்படி ட்ரீட் பண்ணுவோமோ அதே மாதிரிதான் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் தாக்கினோம். ஆனால், அவர்களுக்கு இப்படி நடக்கும் என்றோ, இதுக்காக நான் கைதாகுவேன் என்றோ கொஞ்சம் கூட நினைக்கவில்லை. போலீஸ் ஸ்டேஷனில் இருக்குற ஒவ்வொருவருக்கும் யாராவது ஹெல்ப் பண்ண இருக்காங்க. ஆனால், நான் சாதாரணக் குடும்பத்தில் இருந்து இந்த வேலைக்கு வந்தேன். காவலர் வேலைக்கு சேர்ந்து அப்புறம் தான் எஸ்ஐ எக்ஸாம்க்கு போய் பணியில் சேர்ந்தேன். இப்ப என்னோட எதிர்காலத்தை நினைத்தால் தான் பயமா இருக்கு என்று வருத்தத்துடன் கூறினார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு பலரும் பல விதமாக கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement