இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசனின் மாறுபட்ட வேடத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தசவதாரம். இந்த படத்தில் கமலஹாசன் அவர்கள் பத்து வேடத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் கமல் ஹாசன், அசின், மல்லிகா ஷெராவத் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை தந்தது. இந்த படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் இந்த படத்தில் இடம் பெற்ற கல்லை மட்டும் கண்டால் பாடல் இன்னும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு தான் இருக்கிறது. இந்நிலையில் இந்த பாடலின் குறித்து ஒரு சுவாரசியமான தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. தசாவதாரம் படத்தில் இடம் பெற்ற ,கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது’ என்ற பாடலில் ‘எட்டில் ஐந்து எண் கழியும் என்றும், ஐந்தில் எட்டு எண் கழியாது’ எனும் வரிகள் இடம்பெற்றிருக்கும்.
இதன் பொருள் எதோ கணக்கு பாடம் என்று பலரும் நினைத்து கொண்டிருப்பார்கள். இது ஒரு சமய பிணக்கு என்பதே உண்மை. இந்த படத்தில் கமல் வைணவராக நடித்திருப்பார். நெப்போலியன் சைவ சமய மன்னராக நடித்திருப்பார். கமல்ஹாசனை எவ்வளவு வற்புறுத்தியும் அவர் சிவனை போற்றும் ‘நமசிவாய’ மந்திரத்தை கூறாமல் ‘ஒம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தை உச்சரித்து கொண்டு இருப்பார். இதனால் சைவ சமய மன்னர் கோபத்தால் கமல்ஹாசனை அவர் வணங்கும் பெருமாளுடன் கட்டி கடலில் வீச ஆணையிடுவார்.
இதையும் பாருங்க : சத்தமே இல்லாமல் நிச்சயத்தை முடித்த செம்பருத்தி சீரியல் நடிகர் – இவங்க தான் பொண்ணு.
படத்தில் கமலின் மனைவியாக வரும் அசின் ஐந்தெழுத்தாக இருந்தால் என்ன எட்டெழுத்தாக இருந்தால் என்ன கூறி விடுங்களேன் என்று கதறுவார்.ஆனால், கமல்ஹாசனோ உயிரே போனாலும் சரி “நமசிவாய” என்று சொல்ல மாட்டேன் என்று “ஓம் நமோ நாராயணா” என்று சொல்லுவார். அப்போது தான் கல்லை மட்டும் கண்டால் என்ற பாடலை பாடுவார். அந்த பாடலில் ‘எட்டில் ஐந்து எண் கழியும் என்றும், ஐந்தில் எட்டு எண் கழியாது’ என கூறுவார்.
இதையும் பாருங்க : இந்த சீரியலால என் வாழ்க்கயே வீணாப் போயிடும்போல – புலம்பும் அழகு சீரியல் நடிகை.
அதற்கு எட்டெழுத்து உடைய ‘ஓம் நமோ நாராயணா’ ஐந்தெழுத்து மந்திரமான ‘நமசிவாய’ என்பதில் அடங்கும். ஆனால், “நம சிவாய” என்ற ஐந்தெழுத்து மந்திரத்தில் “ஓம் நமோ நாராயணா” என்ற மந்திரம் அடங்காது என்பது தான் இந்த வரிகளின் உண்மையான அர்த்தம். நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜன் தான். ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான். இந்த வரிகள் சிவனை வணங்கும் சோழ மன்னனான ராஜராஜ சோழனுக்கே ராஜன் இந்த ரங்கராஜன் அதாவது (பெருமாள்) என்பது அர்த்தம்.
ஆனால், இந்த பாடலை எழுதிய ரங்கராஜனுக்கு ஐந்தில் எட்டு எண் கழியாது என்பது நினைவில் இருந்துள்ளது. ஆனால், ஐந்து இல்லாமல் எட்டு இல்லை என்பதை மறந்து விட்டார். ரங்க ராஜன் என்பது இந்த பாடலை எழுதிய கவிஞர்.வாலியின் இயற்பெயர். இதே பாடலில் இன்னொரு வரியில் “வீர சைவர்கள் முன்னால் – எங்கள் வீர வைணவம் தோற்காது” என்ற ஆழமான வரி ஒன்று இடம் பெற்றிருக்கும். கதாநாயகன் வைணவர் என்றாலும் அவரை எதிர்க்கும் சைவ சமயத்தையும் விட்டுக்கொடுக்காமல் வீர சைவம் என்றே குறிப்பிட்டுப்பார் கவிஞர்.வாலி. இந்த இடத்தில் வாலி தன்னை ஒரு கவிஞர் என்று நிருபித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.