ஸ்ட்ரைட்டா அறுபதாம் கல்யாணம் தானானு நாங்களே கிண்டல் பண்ணுவோம் – கிங்ஸ்லி திருமணம் குறித்து சொன்ன நண்பர்.

0
404
- Advertisement -

கிங்ஸ்லி மற்றும் சங்கீதாவின் திருமணம் குறித்து டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான சதீஷ் சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. நெல்சன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கிய டாக்டர் படத்திலும் கிங்ஸ்லிக்கு வாய்ப்பு கொடுத்தார் இயக்குனர் நெல்சன்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக காமெடி காட்சிகள் இடம் பெற்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இப்படத்தின் மூலம் யோகிபாபுவை ரெடின் கிங்ஸ்லி ஓவர் டேக் செய்தார் என்று சொல்லலாம். டாக்டர் படத்தை தொடர்ந்து ரெடின் கிங்ஸ்லி அண்ணத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் மாஸ்டர் பட நடிகையை திடீர் திருமணம் முடித்துள்ளார். சங்கீதா வேறு யாரும் இல்லை, விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ரசிகர்களுக்கு பரிட்சியமானவர் தான்.

- Advertisement -

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு உதவி செய்ய வரும் மருத்துவராகவும் ஸ்ரீநாத்தின் மனைவியாகவும் மதி என்ற கதாபத்திரத்தில் நடித்தவர் சங்கீதா. இந்த படத்தில் இவர் சில நிமிட காட்சியிலேயே நடித்தாலும் இளசுகள் மனதை கொள்ளை கொண்டுள்ளார் இந்த டாக்டர்.இவர் மாஸ்டர் படத்தில் மட்டுமல்லாது கார்த்தியின் சுல்தான் திரைப்படத்திலும், அஜித்தின் வலிமை படத்திலும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிங்ஸ்லி மற்றும் சங்கீதாவின் திருமண புகைப்படங்களை டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான சதீஷ் தான் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

இதனை தொடர்ந்து பலரும் கிங்ஸ்லி – சங்கீதா தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் கிங்ஸ்லி – சங்கீதா திருமணம் குறித்து கூறியசதீஷ் ‘ நானும் கிங்ஸ்லியுமே நீண்ட கால நண்பர்கள். அவரது டான்ஸ் மாஸ்டர்கள்தான் எனக்கும் மாஸ்டர்கள் என்பதால், அவருடனான நட்பு இன்றுவரை தொடர்ந்து வருகிறது. மேலும், திருமண விஷயத்தில் அவர் நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தார்.

-விளம்பரம்-

சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள் இல்லையென்றால் டைரக்டாக அறுபதாம் கல்யாணம் தான் செய்ய வேண்டியதாக இருக்கும் என்று நாங்களே அவரை பலமுறை கலாய்த்து இருக்கிறோம். பின்னர் ஒரு கட்டத்தில் அவரே மனம் மாறி சங்கீதா மீது காதலில் விழுந்துவிட்டார். இது பல வருட காதல் இன்று தான் அவர்களின் திருமணம் மைசூரில் நடைபெற்றது. நானும் அந்த திருமணத்திற்கு சென்றிருக்க வேண்டியது.

ஆனால் படப்பிடிப்பின் போது எனக்கு காலில் ஏற்பட்ட ஒரு சிறிய காயத்தினால் அந்த திருமணத்திற்கு என்னால் செல்ல முடியவில்லை’ என்றும் கூறியுள்ளார். இவர்கள் இருவரின் திருமணம் மைசூரில் நடைபெற்று இருக்கிறது. அங்கே ஒரு படப்பிப்பில் தான் கிங்ஸ்லி இருந்து இருக்கிறார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சில படக் குழுவினர் மற்றும் கலந்து கொண்டு இருக்கிறார்கள் விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதில் பல்வேறு சினிமா பரவாலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Advertisement