தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் வரும் பொங்களை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி வெளியானது. பரபரப்பாக சென்று கொண்ட வாசுல் வேட்டையில் தொடக்கத்தில் அஜித் நடித்த “துணிவு” திரைப்படம் அதிக வாசல் செய்திருந்தாலும் பின்னர் விஜய்யின் “வாரிசு” குடும்ப படம் என்பதினால் வசூலில் தற்போது முன்னிலை வகித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரபூர்வ அறிவிப்பு கிடையாது.
விருந்தளித்த விஜய் :
மேலும் வாரிசு படம் ஆந்திராவில் நேற்று முன்தினம் 14ஆம் தேதி வெளியான நிலையில் வசூல் உலகளவில் அதிகரித்து இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் இரு தரப்பினரிடம் இருந்தும் அதிகாரப்பூர்வ வசூல் என்னவென்று அறியலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் வாரிசு படம் வெற்றியாக சென்று கொண்டிருப்பதினால் நடிகர் விஜய் வாரிசு படக்குழுவினரை அழைத்து சென்னயில் உள்ள ஈசி ஆரில் உள்ள பெரிய நட்சத்திர விடுதியில் அவர்களுக்கு விருந்தளித்தார்.
வெற்றி விழா :
வெற்றி விழா இதற்கு பிறகு சென்னையில் வாரிசு படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குனர் வம்சி படிப்பள்ளி, நடிகர் ஷாம், விடிவி கணேஷ், நடிகை சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து பேசிய இயக்குனர் வம்சி கூறுகையில் `எல்லோரும் என்னை தெலுங்கு இயக்குனர் என்று கூறினர். அது என்னை மிகவும் மனதளவில் காயப்படுத்தியது.
#Sathish About #Vijay SuperStar pic.twitter.com/jfOI7LnJyI
— chettyrajubhai (@chettyrajubhai) January 18, 2023
வம்சி படிப்பள்ளி கூறியது :
நான் தமிழனோ அல்லது தெலுங்கனோ அல்ல நான் ஒரு நல்ல மனிதன். இன்றைக்கு தமிழ் மக்கள் மனதில் எனக்கு ஒரு சிறிய இடம் கொடுத்திருக்கிறார்கள், அதற்கு நான் என்றும் கடமை பட்டவனாக இருப்பேன் என்று உருக்கமாக பேசினார். இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த நடிகர் சரத்குமாரிடம் செய்தியாளர்கள் விஜய் சூப்பர் ஸ்டார் சர்ச்சை குறித்து கேட்டனர். இதற்கு முன்னரே இசை “வாரிசு” இசை வெளியிட்டு விழாவில் சரத்குமார் விஜய் தான் சூப்பர்ஸ்டார் என்று கூறியது பெரும் சர்ச்சையில் சிக்கியது. மேலும் இந்த சர்ச்சைக்கு சமீபத்தில் விளக்கம் கூட கூறியிருந்தார்.
சதிஷ் பேட்டியில் கூறியது :
இந்த நிலையில் தான் இந்த சூப்பர் ஸ்டார் சர்ச்சை குறித்து காமெடி நடிகர் சதிஷ் விளக்கம் கொடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்த சதீஷிடம் சூப்பர் ஸ்டாரை விட சுப்ரீம் ஸ்டார் தான் பெரியது என்ற சர்ச்சை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சதிஷ் வீட்டை விட்டு வந்து ஒவ்வொருவரும் ஸ்டார் அந்தஸ்தை ரசிகர்கள் கொடுக்கிறார்களே அதுவே பெரிய விஷயம் தான். இதில் பெரிய ஸ்டார் சிறிய ஸ்டார் என்றெல்லாம் கிடையாது, ஸ்டார் என்றாலே பெரியவர்கள் தான் என்று கூறினார் சதிஷ்.
இளைய தளபதி :
மேலும் கூறுகையில் கத்தி திரைப்படத்தின் போது விஜய் தன்னுடைய பட்டப்பெயரில் உள்ள இளைய தளபதி பெயரை எடுத்துவிட்டு தளபதி என்று வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறன், நமக்கும் வயசாவது தெளியுதல்ல எனக் கூறினார். நான் தான் உங்களுக்கிடைய லுக்கிற்கு நீங்கள் இன்னமும் 60 வயதுவரையில் இளைய தளபதி என்று வைத்துக்கொள்ளலாம் என விஜய்யுடன் கூறியதாக அந்த பேட்டியில் கூறினார் காமெடி நடிகர் சதிஷ்.