சர்ச்சையான ஆடை விவகாரம் – அந்தர் பல்டி அடித்த சதிஷ் மற்றும் தர்ஷா குப்தா.

0
713
sathish
- Advertisement -

ஓ மை கோஷ் பட விழாவில் தர்ஷா குப்தா ஆடை குறித்து கமன்ட் செய்து இருந்தது பெரும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்த விவகாரத்தில் தர்ஷா குப்தா மற்றும் சதிஷ் இருவர் இடையில் வாக்கு வாதங்களும் வெடித்தது. இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து முதல் முறையாக விளக்கம் கொடுத்துள்ளார்கள் தர்ஷா குப்தா மற்றும் சதிஷ். யுவன் இயக்கி இருக்கும் ஓ மை கோஷ். இந்த படத்தில் பிரபல ஆபாச நடிகை சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், காமெடி நடிகர் சதீஷ், டிக் டாக் புகழ் ஜி பி முத்து உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.

-விளம்பரம்-

சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சதிஷ் ‘சன்னி லியோன் பாம்பேவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். இந்த விழாவில் பேசிய சதிஷ் ‘சன்னி லியோன் பாம்பேவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். அவங்க எப்படி டிரஸ் செய்து இருக்கிறார்கள் என்று பார்த்தீர்கள். கோயம்புத்தூரில் இருந்து ஒரு பொண்ணு வந்திருக்கிறது.

- Advertisement -

‘தர்ஷா குப்தா’ அவங்க எப்படி நம்ம கலாச்சாரத்தில் வந்திருக்கிறார்கள் என்பதை சும்மா சொன்னேன்’ என்று தர்ஷா குப்தாவை கலாய்த்துஇருந்தார். இவரின் இந்த பேச்சைக் கண்டு நிட்டிசன்கள் பலரும் திட்டி தீர்த்து வருகிறார்கள். பின்னணி பாடகியான சின்மயி, பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ், மூடர் கூடம் நவீன் என்று பலர் இந்த வீடியோ குறித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர்.

இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட சதீஷ், தர்ஷா குப்தா எனது பக்கத்தில் அமர்ந்து நான் இன்னைக்கு சன்னி லியோன் விட மார்டனா ட்ரெஸ் பன்னிட்டு வந்துர்கேன்.. அவங்க எப்படி வராங்கனு பாப்போம்னு சொன்னாங்க. பாத்தா சன்னி லியோன் பட்டு புடவை கட்டிட்டு வந்துர்ந்தாங்க அத பாத்தா தர்ஷா அப்செட் ஆகிட்டு சொன்னாங்க.. என்னங்க நான் இப்படி வந்துர்கன் அவங்க அப்படி வந்துட்டாங்க நான் அத பாத்து அப்செட் ஆகிட்டனு நீங்க ஸ்டேஜ்ல பேசும்போது சொல்லுங்க என்று தர்ஷா சொன்னதாக கூறி இருந்தார்.

-விளம்பரம்-

ஆனால், இந்த வீடியோவை சில நிமிடங்களில் தன் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார் சதிஷ். இப்படி ஒரு நிலையில் சதிஷ்ஷின் இந்த வீடியோவிற்கு கீழ் கமண்ட் செய்து இருக்கும் தர்ஷா குப்தா ‘நான் தான் அப்படி சொல்ல சொன்னேன் என்று இப்படி என் மீது திருப்பிவிடுவது நல்லா இருக்கா சதிஷ் ? இது ரொம்ப விசித்திரமா இருக்கு. யாரவது என்ன பத்தி மேடைல நீங்க அசிங்கமா பேசுங்கன்னு சொல்வாங்களா ? எனக்கும் அன்னைக்கு அவ்ளோ காயமாதான் இருந்தது. ஆனா, பெருசா காட்டிக்ல. ஆனா இப்போ இப்படி சொல்றது நல்லா இல்ல’ என்று பதிவிட்டு இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சதிஷ் ‘ஆடை விவகாரத்திற்கு பிறகுதான் நாங்கள் இன்னும் நெருங்கிய நண்பர்களானோம். அதன் பிறகுதான் நிறையவே பேசினாேம். அவங்களோட கஷ்டங்கள் நிறைய எனக்கு புரிய ஆரம்பித்தது. தர்ஷாவின் அம்மாவிடமும் நான் பேசினேன். எனது மனைவியடமும் அவர் உரையாடினார். இந்த விஷயத்தை நாங்கள் இருவரும் பாசிட்டிவாகத்தான் பார்க்கிறோம். ‘ என்று கூறி இருக்கிறார். மேலும், தர்ஷா குப்தா பேசுகையில் ‘அந்த சம்பவத்திற்கு பிறகு நாங்கள் இன்னுமே நிறைய பேசினோம். எங்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டது.’ என்று கூறியுள்ளார்.

Advertisement