‘அவர் பேச சொன்னாரு பேசுனேன்’ – தர்ஷா ஆடை குறித்து எழுந்த சர்ச்சை. வீடியோ வெளியிட்டு பின் அதை delete செய்த சதீஸ்,

0
431
- Advertisement -

சமீபத்தில் தர்ஷா குப்தா ஆடை குறித்து மேடையில் கமெண்ட் அடித்த சதீஷ் தற்போது இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டு பின்னர் அதை நீக்கி இருக்கிறார். மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் இளசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர். இவர் சின்னத்திரை சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பரிச்சயமாகி இருந்தார். அதிலும் இவர் ஜி தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி இருந்த “முள்ளும் மலரும்” என்ற தொடரின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

பின் மின்னலே, செந்தூரப்பூவே போன்ற தொடர்களில் நடித்து இருந்தார். இப்படி இத்தனை நாடகத்தில் இவர் நடித்தாலும் மக்கள் மத்தியில் பெரியதாக பிரபலம் அடையவில்லை. இதை தொடர்ந்து சமூக வலைதளபக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு பிரபலமானார். மேலும், குக்கு வித் கோமாளி மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவர் ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இவர் ‘Oh My Ghosht’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரபல ஆபாச நடிகை சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், காமெடி நடிகர் சதீஷ், டிக் டாக் புகழ் ஜி பி முத்து உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சதிஷ் ‘சன்னி லியோன் பாம்பேவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள்.

அவங்க எப்படி டிரஸ் செய்து இருக்கிறார்கள் என்று பார்த்தீர்கள். கோயம்புத்தூரில் இருந்து ஒரு பொண்ணு வந்திருக்கிறது ‘தர்ஷா குப்தா’ அவங்க எப்படி நம்ம கலாச்சாரத்தில் வந்திருக்கிறார்கள் என்பதை சும்மா சொன்னேன்’ என்று தர்ஷா குப்தாவை கலாய்த்து இருக்கிறார். இவரின் இந்த பேச்சைக் கண்டு நிட்டிசன்கள் பலரும் திட்டி தீர்த்து வருகிறார்கள். பின்னணி பாடகியான சின்மயியும் இந்த வீடியோ குறித்து தனது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதில் ‘அதாவது – உண்மையில் ஒரு பெண்ணை சுட்டிகாட்டி, கலாச்சாரத்திற்கு ஏற்ப ஆடை அணியாத ஒரு பெண்ணின் மீது ஒரு ஆணால் ஒரு கூட்டத்தின் முன் எளிதாக கேட்க முடியும். ஆண்களின் இந்த நடத்தை எப்போது நிறுத்தப்படும்?’ என்று பதிவிட்டு இருக்கிறார்.இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சை குறித்து சதிஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் பேசிய அவர் ஓ மை கோஸ்ட் படத்தில் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடந்தது.

அதில் என்னுடன் நடித்த தர்ஷா குப்தா எனது பக்கத்தில் அமர்ந்து நான் இன்னைக்கு சன்னி லியோன் விட மார்டனா ட்ரெஸ் பன்னிட்டு வந்துர்கேன்.. அவங்க எப்படி வராங்கனு பாப்போம்னு சொன்னாங்க. பாத்தா சன்னி லியோன் பட்டு புடவை கட்டிட்டு வந்துர்ந்தாங்க அத பாத்தா தர்ஷா அப்செட் ஆகிட்டு சொன்னாங்க.. என்னங்க நான் இப்படி வந்துர்கன் அவங்க அப்படி வந்துட்டாங்க நான் அத பாத்து அப்செட் ஆகிட்டனு நீங்க ஸ்டேஜ்ல பேசும்போது சொல்லுங்க என்று தர்ஷா சொன்னதாக கூறியுள்ளார்.

Advertisement